Show all

வரலாறு ஒத்துழைக்கும்! உயர்த்திப் பிடிப்பார்களா? தமிழையும், வங்காளத்தையும்- ஸ்டாலினும், மம்தாவும்.

வரலாற்று அடிப்படையில் தொன்மைக்குரிய மொழி தமிழ். இந்திய மொழிகளில் அதிக மக்களால் பேசப்படுகிற முதன்மைக்குரிய மொழி வங்காளம். இரண்டு மொழிகளையும் இன்றைக்கு முன்னெடுக்க நம் கண்முன் நிற்பவர்கள் ஸ்டாலினும், மம்தாவும்; முயல்வார்களா உயர்த்திப் பிடிக்க?
 
24,ஆனி,தமிழ்தொடர்ஆண்டு-5121: உலகம் முழுவதும் வங்காள மொழியைத் தாய்மொழியாகக் கொண்டவர்களைப் பட்டியல் இட்டால், ஹிந்தியை விட அதிக மக்களால் பேசப்படும் மொழி வங்காள மொழி. இந்தியாவில் மட்டும் கணக்கிட்டால் ஹிந்தி பேசுகிறவர்கள் கொஞ்சம் அதிகம். 

ஹிந்தியைத் தாய்மொழியாகக் கொண்டவர்களைப் போல, வங்காள மொழியைப் பேசுகிறவர்கள் ஆதிக்க வெறி கொண்டவர்களாக இல்லாமல் இருப்பது இந்தியாவிற்கான சிறப்பு. 

வங்காள மொழி வங்காள தேசத்தில் ஆட்சி மொழியாக இருக்கிறது. இந்தியாவில் 22 மொழிகளில் ஒன்றாக அலுவல் மொழியாக இருக்கிறது. இந்தியாவில் இருக்கிற மொழிகளில், அடுத்த நாட்டில் ஆட்சி மொழியாக சிறப்புடனும், இந்தியாவில் பட்டியல் மொழியாக சிறுமைப் படுத்தப் படுகிற இரண்டு மொழிகள் ஒன்று தமிழ். இரண்டு வங்காளம். 

தமிழ் இந்தியா தவிர்த்து இரண்டு நாடுகளில் ஆட்சி மொழியாக உள்ளது. தமிழ் உலகில் ஐந்து நாடுகளில் பண்பாட்டு மொழியாக அங்கீகரிக்கப் பட்டுள்ளது. 
வங்காளம், வங்கதேச குடியரசின் தேசிய மற்றும் அதிகாரப்பூர்வ மொழியாகும். மற்றும் இந்திய குடியரசின் சில கிழக்கு மற்றும் வடகிழக்கு மாநிலங்களான மேற்கு வங்கம், திரிபுரா, அசாம் (பாரக் பள்ளத்தாக்கு) மற்றும் அந்தமான் நிகோபார் தீவுகள் ஆகியவற்றின் அலுவல் மொழியாகவும் உள்ளது. மேலும் இது இந்தியாவின் 22 அதிகாரப்பூர்வ மொழிகளில் ஒன்றாகும் இது மொத்தம் 25கோடி மக்களால் பேசப்படுகிறது, உலகிலேயே மிகுதியான மக்கள் பேசும் மொழிகளில் ஏழாவது இடத்தைவகிக்கிறது. 

இது பிராகிருதம், பாளி, சமஸ்கிருதம் ஆகிய மொழிகளிலிருந்து தோன்றியது. வங்காள மொழியில் தமிழ் மொழியின் தாக்கம் அதிகம் இருப்பதாக மொழி அறிஞர்கள் தெரிவிக்கின்றனர். 

வங்காள மொழியானது ஆயிரமாண்டு நீண்ட, பழமையானதுமான இலக்கிய மரபைக்கொண்டுள்ள ஒரு மொழியாகும்.  வங்காள மறுமலர்ச்சிக்குப் பிறகு பரவலாக வளர்ந்திருக்கிறது மேலும் இது ஆசியாவில் மிக முதன்மையான மற்றும் வேறுபட்ட இலக்கிய மரபுகளில் ஒன்றாகும். இது கலாச்சார ரீதியின் வேறுபட்ட பிராந்தியங்களை இணைக்கின்றது. 

தமிழில் உள்ள செந்தமிழ், கொடுந்தமிழ் போலவே இரட்டை வழக்கு வங்காளத்திலும் உண்டு. வங்காள மொழியின் இலக்கிய வழக்கும், வட்டார வழக்குகளும் பெருமளவில் வேறுபடுகின்றன. 

இந்தியாவின் நாட்டுப் பண் ஜன கண மன, வங்காள தேசத்தின் நாட்டுப்பண் அமர் சோனர் பங்களா, ஆகிய இரண்டு நாட்டுப் பண்களும் வங்காள மொழியில் எழுதப் பட்டவைகள். இரண்டு நாட்டுப் பண்களையும் எழுதியவர் இரவீந்திரநாத் தாகூர்.

வங்காளதேசம் கிழக்குப் பாக்கிஸ்தானாக இருந்தபோது, உருது ஆட்சி மொழியாக்கப்பட்டது. வங்காளத்தில் பெரும்பான்மையானோர் வங்காள மொழியைப் பேசிய போதிலும், உருது மட்டுமே ஆட்சி மொழியாக்கப்பட்டது. தங்கள் மொழியைக் காக்கவும், தனித்துவத்தை நிலைநிறுத்தவும் வங்காள மொழி இயக்கம் தோன்றியது. பல முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டன. இவ்வாறான நடவடிக்கையின் விளைவாக பெப்ரவரி 21 ல் பல வங்காளதேசத்தவர் துப்பாக்கிச் சூட்டில் பலியானர். இந்த நாளை நினைவுகூரும்விதமாக, இது சர்வதேச தாய்மொழி நாளாக ஏற்கப்பட்டுள்ளது.

பெங்காலியில் 100,000 வேற்று மொழிச் சொற்கள் உள்ளன. இவற்றில் 50,000 சொற்கள், சமசுகிருதத்திடம் இருந்து கடனாகப் பெற்ற சொற்கள் பயன்பாட்டில் உள்ளன. இவற்றில் 21,100 சொற்கள், சமசுகிருதத்துடன் தொடர்புடைய வங்காள மொழிச் சொற்கள், மற்றவை ஐரோப்பிய மொழிகளில் இருந்து பெறப்பட்டவை. வேற்று மொழிச் சொற்கள் அதிகளவில் பெறப்பட்டாலும், இவை அனைத்தும் தொழில்நுட்பம் தொடர்பானவை. எனவே, பொதுவழக்கில் இவற்றின் பயன்பாடு மிகக் குறைவு. தற்கால இலக்கியங்களில் இவற்றின் பயன்பாடு குறைந்தளவே காணப்படுகிறது.

பல நூற்றாண்டுகளாக ஐரோப்பியர்களுடனான கொண்டிருந்த தொடர்பினால், வேற்று மொழிச் சொற்கள் பல வங்காளத்தில் சேர்த்துக் கொள்ளப்பட்டன. சில அசாமியச் சொற்கள் பாவனையில் உள்ளன. ஈரான், மத்திய கிழக்கு நாடுகள் ஆகியோரின் படையெடுப்பால் பாரசீக, அரபு, துருக்கிய, பஷ்தூ மொழிச் சொற்கள் வங்காளத்தில் சேர்க்கப்பட்டன. போர்த்துகேய மொழி, டச்சு மொழி, ஆங்கிலச் சொற்களும் காலனி ஆதிக்கக் காலத்தில் சேர்த்துக் கொள்ளப்பட்டன.

பதினெட்டாம் நூற்றாண்டு வரை, வங்காள இலக்கணம் ஆவணப்படுத்தப்படவில்லை. போர்த்துகேயர் ஒருவரின் முயற்சியால், வொகாபுலரியோ எம் இடியமோ பெங்காள்ளா என்ற நூல் எழுதப்பட்டது. பிற்காலத்தில், இலக்கிய வழக்கத்தில் இருந்து எளிய வழக்கம் கொண்டுவரப்பட்டது. 68 ஆண்டுகளுக்கு முன்பு வங்காள மொழி இயக்கம் இந்த மொழியைக் காக்கத் தோன்றியது.

தமிழகமும் வங்காளமும்- எட்டப்பர்களால், தமிழையும் வங்காளத்தையும்- ஹிந்திக்குச் சேவையாற்றுமாறு, தாழ்த்தி வைத்திருக்கிறது. தமிழகமும், வங்காளமும் ஸ்டாலினையும், மம்தாவையும் நம்பி இருக்கிறது. உயர்த்திப் பிடிப்பார்களா? தமிழையும், வங்காளத்தையும்- ஸ்டாலினும், மம்தாவும்.

-தமிழர்க்குத் தொடர்ஆண்டு மட்டுமல்ல, தொடர் நாள் கணக்கும் உண்டு. இன்று தமிழ்த் தொடர்நாள் எண்:18,70,208.

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.