Show all

பிற மொழிகளுக்கு அதிக மரியாதை கொடுத்து ஹிந்தியை வளர்க்க வேண்டும்: ராம்நாத் கோவிந்த்

நடுவண் அரசில் மொழி வகைக்காக என்று செலவிடும் போது- இந்திய அரசியல் சட்டப்படி இந்தியாவின் அலுவல் மொழிகளாக ஏற்றுக் கொள்ளப் பட்ட

1. தமிழ்

2. ஆங்கிலம் – English

3. அசாமிய மொழி ভাৰত

4. பெங்காலி ভারত

5. போடோ மொழி भारत

6. டோக்ரி மொழி भारत

7. குசராத்தி ભારત

8. இந்தி भारत

9. கன்னடம் ಭಾರತ

10. காசுமீரி بًارت

11. கொங்கணி भारत

12. மைதிலி மொழி भारत

13. மலையாளம் ഭാരതം

14. மெய்தி மொழி ভারত

15. மராத்தி भारत

16. நேபாளி மொழி भारत

17. ஒரிய மொழி ଭାରତ

18. பஞ்சாபி ਭਾਰਤ

19. சமஸ்கிருதம் भारतम्

20. சந்தாளி மொழி

21. சிந்தி ڀارت

22. தெலுங்கு భారత దేశము

மேற்கண்ட 22 மொழிகளுக்கும் சம அளவில் தான் செலவிட வேண்டும்.

ஆனால் நடைமுறையில் இந்தியாவின் தலைநகரம் தில்லியில் அதாவது முழுக்க முழுக்க வடக்கே சென்று விட்டதாலும், காங்கிரஸ் ஆட்சியாளர்கள் கொஞ்சமும் நேர்மையற்ற சுயநலமிகளாக இருந்ததாலும்;, அரசு செலவில் ஹிந்தியை அதிகம் தூக்கிப் பிடித்து விட்டார்கள்.

இந்தியாவை வெள்ளையர்கள் விடுவிப்பது வரை இந்திய மொழிகள் அனைத்திற்கும் சம அதிகாரம் இருக்கத் தான் செய்தது.

வெள்ளையர்கள் விடுவித்துச் சென்ற இந்தியா- ஹிந்தியைத் தாய்மொழியாகக் கொண்ட நேர்மையற்ற தலைவர்களிடம் சிக்கியதால், அவர்கள் ஆதிக்கத்தில் சிக்குண்ட மற்ற மொழிகள் தங்களுக்குள்ள அதிகாரத்தை எடுத்துக் கொள்ளவில்லை.

வேடிக்கை என்னவென்றால் அவர்கள் ஆட்சி அதிகாரத்தை முதன் முதலில் மறுத்த திமுக கூட தம்மண்ணின் தாய்மொழியான தமிழுக்கு அரசியல் அமைப்புச் சட்டப்படி நடுவண் அரசில் உள்ள அதிகாரத்தை எடுத்துக் கொள்ளாமல்,

உரிமை கேட்டு நேருவிடம் மன்றாடி நின்றது.

அவரும் முதலாளி போல, ஹிந்தியை விரும்பாத வரை ஹிந்தி திணிக்கப் படாது என்று உறுதிமொழி அளிக்கிறார்.

சுதாரித்துக் கொண்டு-

என்னம்மா மொட்டைமாடி (கல்பனா) நேரு! இந்திய அரசியல் அமைப்புப் படி, இந்தியாவுக்கு ஆட்சி மொழி என்று எதுவும் கிடையாதாமே? ஒன்னோட ஹிந்தியும் 22 இந்திய மொழிகளோட சம அதிகாரம் உள்ள மொழிதானாமே என்று கேட்டிருக்க வேண்டிய திமுக,

நேரு ஐயா உங்கள் உறுதி மொழியை சட்டமாக்கித் தாருங்கள் என்றுதான் கேணத்தனமாக கேட்டு வைத்தது.

இந்தியா விடுதலை பெற்றதிலிருந்து இன்று மோடி வரை ஹிந்திக்கு மட்டுமாக நிறைய செலவு செய்து விட்டார்கள்.

அந்த வகையில் ஒவ்வொரு ஆண்டும் ஹிந்தி நாள் நடுவண் அரசு செலவில் கொண்டாடப் பட்டு வருகிறது.

ஹிந்தி நாளையொட்டி அந்த மொழிக்கு சிறப்பான பங்காற்றியவர்களுக்கு ராஜ்பாஷா (இந்திய அரசியல் அமைப்புச் சட்டப்படி அரசுமொழி என்று எந்த மொழியம் அங்கிகரிக்கப் படவில்லை.) விருதுகள் வழங்கும் விழா வியாழக்கிழமை நடைபெற்றது. விழாவை தொடங்கி வைக்கிறார் குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த்.

நமது நாட்டில் பேசப்படும் பிற பிராந்திய மொழிகளுக்கு அதிக மரியாதையும், உரிய இடமும் கொடுக்க வேண்டுமென்று ஹிந்தி மொழி பேசும் மக்களிடம் குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் வலியுறுத்தியுள்ளார்.

அப்போதுதான், நாடு முழுவதும் ஹிந்தியைப் பிரபலமடையச் செய்ய முடியும் என்றும் அவர் கூறியுள்ளார். (சரியாப் போச்சு)

நடுவண் உள்துறை அமைச்சகம் சார்பில் தில்லியில் வியாழக்கிழமை நடைபெற்ற ஹிந்தி திவஸ் நிகழ்ச்சியில் பங்கேற்ற ராம்நாத் கோவிந்த் பேசியதாவது:

இந்தியாவின் அலுவலக மொழியாக ஹிந்தி (மற்றும் 21 மொழிகளும்) அங்கீகரிக்கப்பட்டு பல ஆண்டுகள் ஆன பிறகும், நாட்டின் சில பகுதிகளில் ஹிந்திக்கு தொடர்ந்து எதிர்ப்பு நிலவி வருகிறது (பின்ன முதுகில் ஏறிக் கொள் என்று கொண்டாடவா முடியும்?).

அண்மையில் பெங்களூருவில் மெட்ரோ ரயில் நிலையங்களில் ஹிந்தி பயன்படுத்தப்பட்டதற்கு எதிர்ப்புத் தெரிவித்து கன்னட அமைப்புகள் நடத்திய போராட்டம்.

முன்னதாக, தமிழ்நாட்டில் நடைபெற்ற ஹிந்தி எதிர்ப்புப் போராட்டங்களை சுட்டிக்காட்டிய அவர், தங்கள் மீது ஹிந்தி திணிக்கப்படுவதாக சில மாநில மக்கள் நினைக்கின்றனர். அவர்கள் மொழிகளுக்கு நாம் (ஹிந்தி பேசும் மக்கள்) உரிய முக்கியத்துவம் அளிக்கப்பட வேண்டும் என்று விரும்புகிறார்கள்.

எனவே, ஹிந்தி பேசும் மக்கள் பிற மொழிகளுக்கு உரிய இடத்தை அளிக்க வேண்டும். பிற மொழிகளைப் பேசும் மக்களுக்கும், பிராந்திய மொழிகளுக்கும் உரிய மரியாதையைக் கொடுக்க வேண்டிய பொறுப்பு நமக்கு உள்ளது.

ஹிந்தி பேசும் மக்கள் தமிழர்களுக்குவணக்கம்கூறி மரியாதை செலுத்த வேண்டும்.

சீக்கியர்களுக்கு பஞ்சாபி மொழியில்சட் ஸ்ரீ அகால்கூற வேண்டும்.

முஸ்லிம்களுக்கு உருது மொழியில்அதாப்தெரிவிக்க வேண்டும்.

தெலுங்கு பேசும் மக்களைகாருஎன்று மரியாதையாக அழைக்க வேண்டும்.

பிற மொழித் தழுவல்கள் மூலமும், பிற மாநில கலாசாரத்தை ஏற்றுக் கொள்வதன் மூலமும் நாட்டு மக்கள் மத்தியில் ஒற்றுமை ஏற்படும். அண்மையில் பெலாரஸ் அதிபர் அலெக்சாண்டர் லூகாஸ்ஹென்கோவை சந்தித்தபோது, ரஷிய மொழியில் அவருக்கு நன்றி தெரிவித்தேன். அவர் ஜெய்ஹிந்த் என்று பதில் கூறினார். இது இருவருக்கும் மகிழ்ச்சியை அளித்தது என்றார்.

பிற மொழிகளுக்கு மரியாதை கொடுப்பது போல் நடித்து நீங்கள் ஹிந்தியை வளர்ப்பீர்களாம்; நாங்கள் குனிந்து கொடுத்துக் கொண்டே இருப்போமாம். மகிழ்ச்சி!

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.