அ.தி.மு.க.வைச் சேர்ந்த சட்டமன்றஉறுப்பினர்கள 19 பேர் டி.டி.வி.தினகரனுக்கு ஆதரவு அளித்து வந்தனர். அவர்கள் 19 பேரும் கடந்த மாதம் 22-ந் தேதி ஆளுனரைச் சந்தித்து, முதல்-அமைச்சர் எடப்பாடி கே.பழனிசாமியை மாற்ற வேண்டும் என்று மனு கொடுத்தனர். ஆனால், இது அ.தி.மு.க. சட்டமன்றஉறுப்பினர்கள் அனைவரும் சேர்ந்து எடுத்த முடிவுக்கு எதிராக உள்ளது என்று 19 பேருக்கும் எதிராக தமிழ்நாடு சட்டப்பேரவைத் தலைவர் ப.தனபாலிடம் அரசு தலைமைக் கொறடா ராஜேந்திரன் புகார் கொடுத்தார். அதன் அடிப்படையில் 19 சட்டமன்றஉறுப்பினர்களுக்கும் தமிழ்நாடு சட்டப்பேரவைத் தலைவர் ப.தனபால் எச்சரிக்கை அறிக்கை பிறப்பித்தார். இந்த எச்சரிக்கை அறிக்கைக்கு செப்டம்பர் 5 க்குள் பதில் அளிக்க வேண்டும் என்றும் 7அன்று நேரில் அணியமாக வேண்டும் என்றும் அதில் கூறப்பட்டு இருந்தது. இந்த நிலையில் சட்டமன்றச் செயலாளரை 5 அன்று வெற்றிவேல், தங்க தமிழ்ச்செல்வன் உள்பட சிலர் வந்து சந்தித்தனர். தமிழ்நாடு சட்டப்பேரவைத் தலைவர் முன் சட்டமன்றஉறுப்பினர்கள்; நேரில் அணியமாகி எச்சரிக்கை அறிக்கைக்கு பதில் அளிப்பதற்கு 15 நாட்கள் கூடுதலாக கால அவகாசம் வேண்டும் என்று மனு கொடுத்தனர். ஆனால் 15 நாட்கள் கால அவகாசம் கேட்டு 19 பேரும் வைத்த கோரிக்கையை தமிழ்நாடு சட்டப்பேரவைத் தலைவர் ப.தனபால் நிராகரித்துவிட்டார். பின்னர் தமிழ்நாடு சட்டப்பேரவைத் தலைவர் புதிய எச்சரிக்கை அறிக்கை ஒன்றை 19 பேருக்கும் பிறப்பித்தார். அதில், 14 அன்று பிற்பகல் 3 முதல் 4 மணிக்குள் தனது முன் நேரில் அணியமாக வேண்டும் என்று கூறியிருந்தார். இந்த நிலையில் டி.டி.வி.தினகரன் அணியில் இருந்து ஜக்கையன் விலகினார். 14 அன்று 19 சட்டமன்றஉறுப்பினர்ககளும் நேரில் அணியமாக வேண்டும் என்பதால் தலைமைச் செயலகத்தில் பரபரப்பு நிலவியது. காலையில் ஜக்கையன் வந்து தமிழ்நாடு சட்டப்பேரவைத் தலைவர் ப.தனபால் முன்னிலையில் அணியமாகி விளக்கம் அளித்தார். சிலரது நிர்ப்பந்தம் காரணமாக ஆளுநரைச் சென்று சந்தித்ததாக அவர் விளக்கம் அளித்ததாக கூறப்படுகிறது. இந்தநிலையில் வழக்;கறிஞர் ராஜா செந்தூர்பாண்டியனுடன் வந்து தமிழ்நாடு சட்டப்பேரவைத் தலைவரை வெற்றிவேல் சந்தித்தார். பின்னர் நிருபர்களுக்கு வெற்றிவேல் முன்னிலையில் வக்கீல் ராஜா செந்தூர்பாண்டியன் அளித்த பேட்டி: 18 சட்டமன்றஉறுப்பினர்கள்; சார்பாகவும் இடைக்கால பதில் கொடுத்துள்ளோம். எந்தச் சூழலில், எந்த அடிப்படையில் ஆளுநரைப் பார்த்து கடிதம் கொடுத்துள்ளோம் என்று அதில் விளக்கமாக கூறியுள்ளோம். இதை அவர் ஏற்றுக்கொண்டாரா? இல்லையா? என்பது இன்னும் முடிவு செய்யப்படவில்லை. அதே சமயம், சில ஆவணங்களை நாங்கள் கேட்டுள்ளோம். அவற்றை கொடுத்த பிறகு இறுதி பதில் தருகிறோம் என்று கூறியுள்ளோம். விசாரணையின் போது யூகத்தில் பதில் அளிக்க முடியாது என்பதால், அதற்கான ஆவணங்களை கேட்டுள்ளோம். இந்த பிரச்சினை வழக்கில் உள்ளது. எனவே இதில் பதில் அளிப்பது சரியாக இருக்காது. சட்டத்திற்கு சம்பந்தப்பட்ட விசயங்களை தமிழ்நாடு சட்டப்பேரவைத் தலைவரிடம் கொடுத்துள்ளோம். அவற்றைப் பரிசீலனை செய்வதாக தமிழ்நாடு சட்டப்பேரவைத் தலைவர் கூறினார். தமிழ்நாடு சட்டப்பேரவைத் தலைவர் முடிவில் தலையிடலாம் என்ற அறங்கூற்று மன்ற உத்தரவுகள் உள்ளன. அவை வழக்குக்கு வழக்கு மாறும். முதல்-அமைச்சர் ஒரு ஆவணம் தாக்கல் செய்துள்ளார். அந்த ஆவணம் அவருக்கு எப்படி போனது? அது தொடர்பான ஆவணங்களையும் எங்களுக்கு தர வேண்டும் என்று கேட்டிருக்கிறோம். சட்டமன்றஉறுப்பினர்கள் யாரும் கட்சிக்குத் துரோகம் செய்யவில்லை, கட்சியை விட்டு போகவும் இல்லை, தலைமைக்கு கட்டுப்பட்டுதான் முடிவெடுத்தோம் என்பதை தெரிவித்துள்ளோம். அந்த ஆவணங்களை தந்தால் இறுதி விசாரணைக்கு வந்து அணியமாவோம். தமிழக காவல்துறையினரால் பிரச்சினை உள்ளது. எனவே இங்கு வருவதற்கு கர்நாடக காவல்துறை பாதுகாப்பு வேண்டும் என்றும் கேட்டுள்ளோம். அதை மனுவாக கொடுத்தால் பரிசீலிப்பதாக கூறியுள்ளார். அதை மனுவாகவும் கொடுத்துள்ளோம். யார் மிரட்டினார்கள் என்று கர்நாடக காவல்துறையில் செந்தில் பாலாஜி புகார் கொடுத்திருக்கிறார். இவ்வாறு அவர் கூறினார். இந்தநிலையில் துணை முதல்-அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் உள்பட அனைத்து அமைச்சர்களையும் தனது அறைக்கு முதல்-அமைச்சர் எடப்பாடி கே.பழனிசாமி அழைத்து பேசினார். இந்தச் சந்திப்பு சுமார் ஒரு மணி நேரம் நடைபெற்றது. சட்டத்துறை அமைச்சர் சி.வி.சண்முகம், தமிழக அரசின் டெல்லி பிரதிநிதி தளவாய் சுந்தரம், அரசு வழக்;கறிஞர் விஜய நாராயண் ஆகியோரை தமிழ்நாடு சட்டப்பேரவைத் தலைவர் ப.தனபால் சந்தித்து நீண்ட நேரம் ஆலோசனை நடத்தினார். முதல்-அமைச்சர் எடப்பாடி கே.பழனிசாமியுடனும் அவர் ஆலோசனை செய்தார். இதுபற்றி சட்டமன்ற வட்டாரத்தில் பேசியபோது, தமிழ்நாடு சட்டப்பேரவைத் தலைவரின் முடிவுதான் இறுதியானது. இந்த விசயத்தில் இதுவரை அவர் முடிவு செய்யவில்லை. அவரது விசாரணை முறை குறித்து யாரும் கருத்துகளைத் திணிக்க முடியாது. 18 பேரும் விளக்க மனு அளித்துள்ளனர். அனைத்தும் ஒன்றுபோல இருந்தாலும் அனைத்தையும் படித்துப் பார்த்துவிட்டுதான் தமிழ்நாடு சட்டப்பேரவைத் தலைவர் முடிவு செய்வார் என்று தெரிவித்தனர். முன்னம் எதிராக இருந்த பன்னீரின் 11 சட்டமன்ற உறுப்பினர்களையே கட்சி பாதுகாப்பு கருதி தகுதி நீக்கம் செய்யாத போது 18 சட்டமன்ற உறுப்பினர்கள்; தகுதி இழப்பு நடவடிக்கைக்கு உள்ளாவார்களா? சாத்தியமே யில்லை. பாஜகவும், அதிமுகவில் அனைவரும், ஆட்சி கலைந்து விடக் கூடாது என்பதில் உறுதியாக இருக்கின்றனர். ஆளும் நடுவண் அரசின் சட்டங்களை நடைமுறைப் படுத்தும் பொறுப்பில் உள்ள அறங்கூற்று மன்றமும் அதே தலைப்பில் உள்ளது.
மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.



