Show all

ஹிந்தி, சம்ஸ்கிருத திணிப்பை கைவிட வேண்டும்! ஒன்றிய ஆட்சிப் பொறுப்பில் உள்ள பாஜகவிற்கு- தொடக்கப்பள்ளி ஆசிரியர் மன்றம் கோரிக்கை

தமிழ்நாடு தொடக்கப் பள்ளி ஆசிரியர் மன்ற மாவட்ட அளவிலான ஒன்றியச் செயலாளர்கள் கூட்டத்தில் ஹிந்தி மற்றும் சம்ஸ்கிருத மொழி திணிப்பை, ஒன்றிய ஆட்சிப் பொறுப்பில் உள்ள பாஜக கைவிட வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்ன.

14,புரட்டாசி,தமிழ்தொடர்ஆண்டு-5121: பரமத்தி வேலூர் ஆசிரியர் மன்ற அலுவலகத்தில்  ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற கூட்டத்துக்கு  மாவட்ட துணைச் செயலாளர் சங்கர் தலைமை வகித்தார். பரமத்தி ஒன்றியச் செயலாளர் சேகர் வரவேற்றார். மாவட்டச் செயலாளர் முருகசெல்வராசன் தீர்மானங்கள் குறித்து விளக்கிப் பேசினார். 

இக்கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் வருமாறு:
(!) ஒன்றிய ஆட்சிப் பொறுப்பில் உள்ள பாஜக, அனைத்து மாநில மக்களின் மொழிகளையும் சமமாக மதித்திட வேண்டும். ஹிந்தி மற்றும் சம்ஸ்கிருதம் மொழித் திணிப்பை முற்றிலுமாக கைவிட வேண்டும். 
(!) சமூக நீதிக்கும், பொதுக் கல்விக்கும், ஆசிரியர்களுக்கும், மாணவர்ளுக்கும் விரோதமான புதிய கல்விக் கொள்கை வரைவு அறிக்கையை தமிழக அரசு முற்றிலுமாக நிராகரிக்க வேண்டும். 
(!) 20 கிலோமீட்டர் எல்லைக்குள் செயல்படும் தொடக்க மற்றும் நடுநிலைப் பள்ளிகளை மேல்நிலைப்பள்ளிகளோடு இணைப்பதைக் கைவிட வேண்டும். 
(!) கீழடி நாகரிகத்தை பள்ளி, கல்லூரி, பல்கலைக்கழகப் பாடநூல்களில் இடம்பெற செய்ய வேண்டும். கீழடியில் உலகத் தரம் வாய்ந்த அருங்காட்சியகம் அமைக்க வேண்டும். (!) தமிழக முதல்வர் ஜாக்டோ - ஜியோவின் மாநில ஒருங்கிணைப்பாளர்களை அழைத்துப் பேசி கோரிக்கைகளை நிறைவேற்றிட வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

இக் கூட்டத்தில் மாநில பொதுக்குழு உறுப்பினர் ரவிக்குமார், மாவட்ட தணிக்கைக் குழு உறுப்பினர் தண்டபாணி உள்ளிட்ட மாவட்ட மற்றும் ஒன்றிய நிர்வாகிகள் கலந்து கொண்டனர். முடிவில் நாமக்கல் ஒன்றியச் செயலாளர் ஜெயக்குமார் நன்றி கூறினார்.
 
-தமிழர்க்குத் தொடர்ஆண்டு மட்டுமல்ல, தொடர் நாள் கணக்கும் உண்டு. இன்று தமிழ்த் தொடர்நாள் எண்:18,70,292.

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.