Show all

மோடி அவர்கள் என் கண்ணைத் திறந்தார்! பெருமை பெற்ற தமிழைக் கற்காது போனது குறித்து வெட்கப்படுகிறேன்: ஆனந்த் மகிந்திரா

மகிந்திரா அணி தலைவர் ஆனந்த் மகிந்திரா தமிழ் மொழி பெருமை குறித்து வெளியிட்ட கீச்சு இணையத்தில் தீயாகி வருகிறது.

13,புரட்டாசி,தமிழ்தொடர்ஆண்டு-5121: ஐ.நாவில் உரையாற்றிய இந்தியத் தலைமைஅமைச்சர் மோடி, ‘யாதும் ஊரே யாவரும் கேளிர்’ என்ற கணியன் பூங்குன்றனரின் புறநானூற்றுப் பாடலை மேற்கோள்கட்டி தமிழின் பெருமை குறித்துப் பேசினார். 

இந்நிலையில் இன்று சென்னை இந்தியத் தொழில் நுட்பக் கழகத்தின் 56-வது பட்டமளிப்பு விழாவில் பங்கேற்ற இந்தியத் தலைமைஅமைச்சர் மோடி, நான் அமெரிக்கா சென்ற போது, அங்கு பேசுகையில், ‘தமிழ்மொழி மிகவும் பழைமையான மொழி’ என்று தெரிவித்தது அமெரிக்க ஊடகங்களில் தலைப்பு செய்தியானது. 

உலகின் மிகப்பழைமையான மொழி தமிழ். எனவே தமிழைப் போற்றுவோம். தமிழர்களின் விருந்தோம்பல் சிறந்தது. இட்லி, வடை ஆகிய உணவுகளைச் சாப்பிட்டால் உற்சாகம் பிறக்கும் எனப் பேசினார். இதற்கு வரவேற்பு தெரிவித்து பாராட்டுக்கள் குவிந்துவருகின்றன.

இதற்கிடையே மகிந்திரா அணி தலைவர் ஆனந்த் மகிந்திரா தமிழ் மொழி குறித்து தற்போது பதிவிட்ட கீச்சு இணையத்தில் தீயாகி வருகிறது. அவர் அந்தக் கீச்சுவில் தெரிவித்திருந்ததாவது: ஐ.நாவில் இந்தியத் தலைமைஅமைச்சர் மோடி உலகின் பழைமையான மொழி தமிழ் என்பதைக் குறிப்பிட்டுப் பேசினார். இதுவரை இது தெரியாமல் இருந்ததற்காக நான் வெட்கப்படுகிறேன். இந்த உண்மை இவ்வளவு நாள் எனக்குத் தெரியாமல் இருந்துள்ளது. தமிழ்மொழியின் பெருமையையும் இந்த உண்மையையும் நாம் இந்தியா முழுவதும் பரப்ப வேண்டும். நான் உதகையில் உள்ள ஒரு பள்ளியில்தான் படித்தேன். அப்போதே தமிழைப் படித்திருக்க வேண்டும்;.

-தமிழர்க்குத் தொடர்ஆண்டு மட்டுமல்ல, தொடர் நாள் கணக்கும் உண்டு. இன்று தமிழ்த் தொடர்நாள் எண்:18,70,291.

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.