Show all

23000 ரூபாய் அபராதம் விதித்த காவல்துறை! மோட்டார் வாகன விதிமுறைகளை மீறியதாக இருச்சக்கர வாகன ஓட்டுநர் ஒருவருக்கு

மோட்டார் வாகன விதிமுறைகளை மீறியதாக இருச்சக்கர வாகன ஓட்டுநர் ஒருவருக்கு 1.சுற்றுச்சூழலை மாசுபடுத்தும் வகையில் வாகனம் இயக்கியது, 2.ஓட்டுநர் உரிமம் இல்லாமல் இருந்தது, 3.தலைக்கவசம் அணியாமல் வாகனம் ஓட்டியது, 4.வாகனபதிவு சான்று கைவசம் 5.காப்பீட்டு ஆவணம் கையில் இல்லாமல் இருந்தது என்பது உள்ளிட்ட 5 பிரிவுகளின் கீழ் 23,000 ரூபாயை  காவல்துறையினர் அபராதமாக விதித்துள்ளனர்.

17,ஆவணி,தமிழ்தொடர்ஆண்டு-5121: மோட்டார் வாகன விதிகளை மீறுபவர்களுக்கு கடுமையான அபராதம் மற்றும் தண்டனைகள் விதிக்கப்படும் என்று புதிய சட்டம் அமுலுக்கு கொண்டுவரப் பட்டுள்ளது. 

இந்த சட்டம் அமலுக்கு வந்த இரண்டாவது நாளில், டெல்லி குர்கானைச் சேர்ந்த ஒருவர் எந்த வித ஆவணங்களும் இன்றி வாகனம் ஓட்டியது உள்ளிட்ட காரண வகைகளுக்காக, அவருக்கு 23,000 ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. 

டெல்லி மாநிலம் குர்கானைச் சேர்ந்தவர் தினேஷ் மதன். இவர் ஹரியானா மாநிலம் குருக்ராமில் தனது இருச்சக்கர வாகனத்தில் சென்றுள்ளார். அப்போது வாகன சோதனையில் ஈடுபட்டிருந்த போக்குவரத்து காவலர்கள் அவரது வாகனத்தை நிறுத்தி ஆவணங்களை காட்டும்படி வலியுறுத்தியுள்ளனர். ஆனால் அவரிடம், வாகனப்பதிவு புத்தகம், ஓட்டுநர் உரிமம், வாகனக்காப்பீடு என்று எந்த ஆவணங்களும் கைவசம் இல்லை. அதோடு, தலைக்கவசம் அணியாமல் வாகனம் ஓட்டியுள்ளார். 

இதனால்: 1.சுற்றுச்சூழலை மாசுபடுத்தும் வகையில் வாகனம் இயக்கியது, 2.ஓட்டுநர் உரிமம் இல்லாமல் இருந்தது, 3.தலைக்கவசம் அணியாமல் வாகனம் ஓட்டியது, 4.வாகனபதிவு சான்று கைவசம் 5.காப்பீட்டு ஆவணம் கையில் இல்லாமல் இருந்தது என்பது உள்ளிட்ட 5 பிரிவுகளின் கீழ் 23,000 ரூபாயை  காவல்துறையினர் அபராதமாக விதித்துள்ளனர்.

இருக்கை கச்சை மற்றும் தலைக்கவசம் அணியாமல் வாகனம் ஓட்டுபவர்களுக்கு ஏற்கனவே 100 ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டு வந்த நிலையில், இந்த புதிய சட்டத்திருத்தம் அமலுக்கு வந்த பிறகு 1000 ரூபாய் அபராதம் விதிக்கப்படுகிறது. இந்த சட்டத்திருத்தம் அமலுக்கு வந்த முதல்நாளே டெல்லியில் 3900 பேருக்கு குற்றஅறிக்கை கொடுக்கப்பட்டுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளது. 

விதிமுறைகளை மீறினால் அபராதம் விதிக்கும் அரசு, வாகன ஓட்டிகளுக்குத் தேவையான வசதிகளை செய்து கொடுப்பதில்லை. போக்குவரத்து வசதிகளை செய்து கொடுத்துவிட்டு அபராதம் விதிக்கட்டும். குண்டும் குழியுமான சாலைகளில் சிரமப்பட்டு வாகனங்களை ஓட்ட வேண்டி இருக்கிறது. இதற்கு நாங்கள் யாரிடம் அபராதம் வசூலிக்க வேண்டும் என்று குமுறுகின்றனர் வாகன ஓட்டிகள்.

ஒரு வேடிக்கை என்ன தெரியுமா? தினேஷ் மதன் ஓட்டி வந்த இரண்டு சக்கர வாகனம் ரூ ஐயாயிரத்திற்கு தேறுமா என்றுதான் தெரியவில்லை. இந்த நிலையில், பாவம் அவர் 23000 ரூபாய்க்கு என்ன செய்யப் போகிறாரோ? தண்டனை என்பது திருந்துவதற்கு ஒரு வாய்ப்பு என்றுதான் சட்டம் சொல்கிறது. ஆனால் இந்த அபராதம் அவரைக் கடனாளியாக்கி வாழ்நாள் துன்பத்தில் தள்ளிவிடாதா? 

-தமிழர்க்குத் தொடர்ஆண்டு மட்டுமல்ல, தொடர் நாள் கணக்கும் உண்டு. இன்று தமிழ்த் தொடர்நாள் எண்:18,70,264.

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.