இப்போது கதவைத் திறந்து விட்டாலும் நான் போய் விடுகிறேன்; நான் எனக்காக பேசவில்லை; நண்பர்களுக்காக பேசுகிறேன்; வெளி நாட்டில் இருந்து வந்த தர்சனுக்காக பேசுகிறேன். மக்களே! தயவு செய்து சேரன், வனிதா, செரின் ஆகியோருக்கு வாக்களிக்காமல் வெளியேற்றுங்கள்; எனக்கும் கூட வாக்கு அளிக்காதீர்கள் என்று தாய் மாமன் பட சத்தியராஜ் பாணியில் தனக்கான அனுதாப வாக்கு வங்கியை உருவாக்கி வருகிறார் கவின். 17,ஆவணி,தமிழ்தொடர்ஆண்டு-5121: இப்போது கதவைத் திறந்து விட்டாலும் நான் போய் விடுகிறேன். நான் எனக்காக பேசவில்லை. வெளி நாட்டில் இருந்து வந்த தர்சனுக்காக பேசுகிறேன். மக்களே! தயவு செய்து சேரன், வனிதா, செரின் ஆகியோருக்கு வாக்களிக்காமல் வெளியேற்றுங்கள்; எனக்கும் கூட வாக்கு அளிக்காதீர்கள் என்று தாய் மாமன் பட சத்தியராஜ் பாணியில் தனக்கான அனுதாப வாக்கு வங்கியை உருவாக்கி வருகிறார் கவின். இவன் மக்களிடம் அனுதாபத்தைத் தேடி பிக்பாஸ் தலைப்பை வெல்ல திட்டமிடுகிறான் என்று செரின் நேற்று புலம்பலில் வெளிப்படுத்தினார். இது வனிதாவுக்கு மட்டுந்தான் தெளிவாகப் புரிகிறது. கவினின் முகத்திரையைக் கிழிக்க தயவு கூர்ந்து சாக்சியை உள்ளே அனுப்புங்கள் பிக்பாஸ் என்று வேண்டுகோள் வைத்துக் கொண்டிருந்தார் வனிதா. கமல்ஹாசன் தொகுத்து வழங்கும் பிக்பாஸ் நிகழ்ச்சி 70 நாட்களைக் கடந்து இறுதிக்கட்டத்தை நோக்கி பயணித்து வருகிறது. தொடக்கத்தில் 16 போட்டியாளர்களுடன் தொடங்கிய பிக்பாஸ் நிகழ்ச்சியில் தற்போது 8 போட்டியாளர்கள் உள்ளனர். இந்தக் கிழமை வெளியேற்றப்படுவோரின் பட்டியலில் கவின், சேரன், செரின், முகென், லாஸ்லியா ஆகியோர் உள்ளனர். இதில் தாய் மாமன் பட சத்தியராஜ் பாணியில் தனக்கு வாக்களிக்க வேண்டாம் என்று, மக்கள் அனுதாபத்தைத் தேடும் கவின் அதிக வாக்குகளைப் பெற்று முதலிடத்தில் இருக்கிறார். இப்போதைக்கு செரின் தான் மிகக் குறைந்த வாக்குகள் பெற்று வருகிறார். இந்தக் கிழமை செரின் வெளியேறப் போவது உறுதி. அடுத்த கிழமை லாஸ்லியாதான் குறைந்த வாக்கு அடிப்படையில் வெளியேறப் போகிறார். வனிதாவையும் குறுக்கே நுழைந்தவர் என்ற கருத்துப் பரப்புதல் மூலம் வெளியேற்றும் முயற்சியில் கவின் ஈடுபட்டுள்ளார். திட்டமிட்டு கவின் அனைத்து பெண்களையும் வெளியேற்றியாயிற்று. இவ்வாறு கவின் திட்டம் வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கும் நிலையில், அபிராமி, சாக்சி, மோகன் வைத்யா ஆகிய மூவரும் மீண்டும் பிக்பாஸ் வீட்டுக்குள் நுழைந்துள்ளனர். முன்னதாக சாக்சியுடனான கவினின் காதல் குறித்து நேற்றைய நிகழ்ச்சியில் வனிதா பேசியிருந்தார். இதனால் கவின் கடும் கோபமடைந்தார். வீட்டிலிருக்கும் மற்ற போட்டியாளர்கள் வனிதாவின் பேச்சுக்கு ஈடுகொடுக்க முடியாமல் அமைதி காத்தனர். லாஸ்லியா மட்டும் கவினால் மந்திரித்து விடப்பட்டவராக வனிதாவிடம் வாதிட்டார். மேலும் சேரன்,ஷெரின் ஆகியோர் பல வெற்றிகளைப் பார்த்துவிட்டதாகவும், அதனால் அவர்கள் பிக்பாஸ் வீட்டில் இருக்கும் மற்ற போட்டியாளர்களுக்கு விட்டுக் கொடுக்க வேண்டும் என்று கூறி இருவரையும் வெளியேற்றத்திற்கு முன்மொழிந்தார் கவின். இதனால் கோபமடைந்த வனிதா வெளியிலிருக்கும் காரணங்களைச் சொல்லி வெளியேற்றத்திற்கு முன்மொழியக் கூடாது என்றும், தேவையில்லாமல் கவின் அனுதாபத்தை ஏற்படுத்தி விளையாட்டை முன்னெடுப்பதாக குற்றம் சாட்டியிருந்தார். இந்த சண்டை இன்றும் தொடர்கிறது. இதுஒருபுறமிருக்க அண்மையில் பிக்பாஸ் வீட்டில் நடந்த வேலைப்போட்டி ஒன்றில், சாக்சி தன்னை வைத்து விளையாட்டை முன்னெடுத்ததாக கவின் கூறியிருந்த நிலையில் அதை மறுத்து நடிகை சாக்சி காணொளி ஒன்றை வெளியிட்டிருந்தார். இந்நிலையில் மீண்டும் சாக்சி வீட்டுக்குள் சென்றிருப்பது கவினுக்கு ஆபத்தாகவே முடியுமா? அதையும் சமாளிக்க கவின் குறுக்கு வழியைக் கண்டு பிடித்து விளையாட்டை முன்னெடுத்து பிக்பாஸ் தலைப்பை வென்றெடுப்பாரா! தொடர்ந்து பார்ப்போம். -தமிழர்க்குத் தொடர்ஆண்டு மட்டுமல்ல, தொடர் நாள் கணக்கும் உண்டு. இன்று தமிழ்த் தொடர்நாள் எண்:18,70,264.
இந்த நிலையில் பிக்பாஸ் நிகழ்ச்சியிலிருந்து வெளியேற்றப்பட்ட அபிராமி, சாக்சி, மோகன் வைத்யா ஆகிய மூவரும் மீண்டும் பிக்பாஸ் வீட்டுக்குள் அனுப்பி வைக்கப் பட்டுள்ளனர்.
மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.