Show all

“மிகுந்த அழுத்தம்” காரணமா! எப்போதும் அறிவிப்புகளில் மக்களுக்கு கிடுநடுக்கத்தை தந்துவந்த மோடி நேற்று தந்தது இன்ப அதிர்ச்சி

தலைமைஅமைச்சர் மோடி நேற்று நாட்டு மக்களுக்கு உரையாற்றவுள்ளார் என்ற அறிவிப்பு வெளியானபோது மக்களிடம் என்னவோ ஏதோ என்று, பணமதிப்பிழப்பு மற்றும் சரக்கு சேவைவரி போன்று, இதுவரை அவரது அறிவிப்பால் அடைந்த இன்னல்களின் அதே கிடுநடுக்கத்தை உணர முடிந்தது. ஆனால்…

25,வைகாசி,தமிழ்த்தொடராண்டு-5123: கடந்த மாதம் நடைமுறைக்கு வந்த மூன்றாம் கட்ட தடுப்பூசி திட்டப்படி, 18அகவைக்கு மேற்பட்ட அனைவருக்கும் தடுப்பூசி போடலாம் என்று தெரிவித்த ஒன்றிய பாஜக அரசு, தடுப்பூசியை மாநிலங்கள் மற்றும் தனியார் மருத்துவமனைகளே கொள்முதல் செய்து கொள்ளலாம் என்று தெரிவித்து திட்டத்திற்கு வெளியில் நின்றது. 

இதனால் உற்பத்தியாளர்களிடம் இருந்து மாநிலங்களே தடுப்பூசியை கொள்முதல் செய்து பயன்படுத்தி வருகின்றன. அதைப்போல வெளிநாடுகளில் இருந்தும் நேரடியாக இறக்குமதி செய்யும் நடவடிக்கையிலும் மாநிலங்கள் இறங்கின. 

ஆனால் இந்த பணிகள் மாநிலங்களுக்கு பெரும் அறைகூவலாக மாறின. போதுமான அளவுக்கு தடுப்பூசிகள் கிடைக்காததால், பல மாநிலங்களில் பற்றாக்குறையும் நிலவி வருகிறது. மேலும், தடுப்பூசி நிறுவனங்கள் தடுப்பூசியை ஒன்றிய அரசு, மாநில அரசு, தனியார் மருத்துவமனைகள் என 3 பிரிவினருக்கும் 3 விதமாக விலை நிர்ணயித்தது. இந்த விலை நிர்ணய முறையும் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது.

எனவே ஒன்றிய அரசே தடுப்பூசியை கொள்முதல் செய்து மாநிலங்களுக்கு வழங்க வேண்டும் என பல மாநிலங்கள் கோரிக்கை விடுத்தன.
பாஜக ஒன்றியத்தில் ஆட்சிப் பொறுப்பேற்றதில் இருந்து, தலைமை அமைச்சர் மோடி நாட்டு மக்களுக்கு இன்று உரையாற்றுகிறார் என்ற செய்தி வெளியானால், இந்திய மக்கள் நில நடுக்கம் முன்னரே அறிவிக்கப் பட்டது போல, கிடு நடுங்கிப் போவார்கள். பணமதிப்பிழப்பு, சரக்குசேவை வரி போன்றவைகள் இந்திய மக்கள் கிடு நடுங்கிப் போக தலைமை அமைச்சர் மோடி அவர் உரையாற்றுகையில் அறிவித்த அறிவிப்புகள் ஆகும். 

இந்நிலையில், தலைமைஅமைச்சர் மோடி நேற்று நாட்டு மக்களுக்;கு உரையாற்றவுள்ளார் என்ற அறிவிப்பு வெளியானபோது மக்களிடம் என்னவோ ஏதோ என்று, அதே கிடுநடுக்கத்தை உணர முடிந்தது. 

ஆனால் தமிழ்நாடு, வாங்க நாடு, மலையாள நாடு ஆகிய மூன்று மாநிலங்களின் தேர்தல்களில் பாஜக புறமுதுகிட்டு ஓட விரட்டியடிக்கப்பட்ட நிலையில் இனியும் மதஆதிக்கவாத அடாவடி அரசியல் எடுபாடாது என்று அஞ்சி முதல் முறையாக நல்லதொரு அறிவிப்பை ஒன்றிய பாஜக அரசு மோடி தெரிவிக்கும் வகைக்கு பணிந்திருக்கிறது. 

இந்நிலையில், தலைமைஅமைச்சர் மோடி நேற்று நாட்டு மக்களுக்;கு இன்ப அதிர்ச்சி உரையாற்றினார். அப்போது, மாநிலங்கள் இனி தனியாக கொரோனா தடுப்பூசி செய்ய வேண்டாம் எனவும், மாநிலங்களுக்கு தேவையான கொரோனா தடுப்பூசியை ஒன்றிய அரசே கொள்முதல் செய்து இலவசமாக வழங்கும் என தன் உரையில் தெரிவித்தார். 

தடுப்பூசியை ஒன்றிய அரசே கொள்முதல் செய்து மாநிலங்களுக்கு இலவசமாக வழங்கும் என ஒன்றிய பாஜக அரசின் தலைமைஅமைச்சர் மோடி மூலமான அறிவித்தலுக்கு பல்வேறு மாநில முதல்அமைச்சர்கள் நன்றி தெரிவித்துள்ளனர்.

இந்நிலையில், ஒன்றியத் தலைiஅமைச்சர் மோடியின் இந்த அறிவிப்பு குறித்து மேற்குவங்காள முதல்அமைச்சர் மம்தா பானர்ஜி கருத்து தெரிவித்துள்ளார். இது தொடர்பாக நேற்று மம்தா தனது கீச்சுப் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில், அனைவருக்கும் கொரோனா தடுப்பூசியை இலவசமாக வழங்குங்கள் என்று பல மாதங்களாலப் பல முறை தலைமைஅமைச்சர் மோடிக்கு மடல் எழுதியுள்ளேன். “மிகுந்த அழுத்தம்” வந்த பிறகு நமது பேச்சையும் (மாநில அரசு), நாம் கேட்டுக்கொண்டதையும் நடைமுறைபடுத்த மோடி முன்வந்துள்ளார் என்று தெரிவித்துள்ளார்.

கொரோனா தொற்று பரவிய தொடக்கத்தில் இருந்தே இந்திய மக்களின் நல்வாழ்வுக்கு முன்னுரிமை அளிக்கப்பட்டிருக்க வேண்டும். ஆனால், தலைமைஅமைச்சர் மோடியின் தாமதமான முடிவு ஏற்கனவே பலரது உயிரை வாங்கிவிட்டது. கொரோனா தடுப்பூசி செலுத்தும் பணிகளில் மற்றும் அது தொடர்பான நிர்வாகம் இந்த முறை அரசியலாக இல்லாமல் மக்களுக்கானதாக இருக்கும் என்று நம்புகிறேன்’ என தெரிவித்துள்ளார்.

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.