கடந்த நிதியாண்டில் மட்டும் பாஜககட்சி, கார்பரேட் மற்றும் தனிநபர் வாயிலாக சுமார் 785.77 கோடி ரூபாய் அளவிலான நிதியை நன்கொடையாகப் பெற்றுள்ளது என பாஜக தேர்தல் ஆணையத்திடம் முன்வைத்த அறிக்கையின் வாயிலாகத் தற்போது தெரியவந்துள்ளது. 27,வைகாசி,தமிழ்த்தொடராண்டு-5123: கடந்த நிதியாண்டில் மட்டும் பாஜககட்சி, கார்பரேட் மற்றும் தனிநபர் வாயிலாக சுமார் 785.77 கோடி ரூபாய் அளவிலான நிதியை நன்கொடையாகப் பெற்றுள்ளது என பாஜக தேர்தல் ஆணையத்திடம் முன்வைத்த அறிக்கையின் வாயிலாகத் தற்போது தெரியவந்துள்ளது. இது இந்திய வரலாற்றில் அரசியல் கட்சிகள் பெற்ற ஓராண்டு நன்கொடையில் மிகமிக அதிகம் என்பதாகத் தரவுகள் தெரிவிக்கின்றன. குறிப்பாகத் தலைமைஅமைச்சர் மோடியின் நெருங்கிய நண்பர்களாகக் கூறப்படும் முகேஷ் அம்பானி மற்றும் கௌதம் அதானி எவ்வளவு கொடுத்துள்ளார்கள் என்பதை அறிவதுதானே ஒவ்வொருவரின் ஆர்வமாக இருக்க முடியும். பாஜக பல்வேறு தேர்தல் அறக்கட்டளை அமைப்புகள் மூலம், இந்த நன்கொடைகளைப் பெறுகிறது. இதன் படி பாஜக கடந்த நிதியாண்டில் சுமார் ஐந்து தேர்தல் அறக்கட்டளைகள் மூலம் பணத்தைப் பெற்றுள்ளது. ப்ரூடென்ட் தேர்தல் அறக்கட்டளை வாயிலாகப் பார்தி ஏர்டெஸ், டிஎல்எப், ஜிஎம்ஆர் ஏர்போர்ட் டெவலப்பர்ஸ் போன்ற பல முன்னணி கார்ப்பேரட் நிறுவனங்கள் இணைந்து சுமார் 217.75 கோடி ரூபாய் அளவிலான நிதியை பாஜகவுக்கு நன்கொடையாகக் கொடுத்துள்ளனர். இந்த நிறுவனங்களைத் தொடர்ந்து ஐடிசி, ஹால்திராம் ஸ்னாக்ஸ் ஆகிய நிறுவனங்கள் தனிப்பட்ட முறையிலும் நன்கொடை கொடுத்துள்ளன. ஜன்கல்யான் தேர்தல் அறக்கட்டளை மூலம் ஜேஎஸ்டபுள்யூ சிமெண்ட், ஜேஎஸ்டபுள்யூ எனர்ஜி, ஆகிய நிறுவனங்கள் மற்றும் இதர பிற நிறுவனங்கள் இணைந்து சுமார் 45.95 கோடி ரூபாய் அளவிலான நிதியை நன்கொடையாக அளித்துள்ளன. இதேபோன்று ஏபி தேர்தல் அறக்கட்டளை வாயிலாக 9 கோடி ரூபாயும், சமாஜ் தேர்தல் அறக்கட்டளை வாயிலாக 3.75 கோடியும் நன்கொடை அளிக்கப்பட்டுள்ளது. பிஜேபி அளித்துள்ள நன்கொடை பட்டியலில் ரிலையன்ஸ், அதானி குழுமம், முகேஷ் அம்பானி, கௌதம் அதானி ஆகியோரின் பெயர் இடம்பெறவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. தேர்தல் ஆணையத்திடம் பாஜக தந்த கணக்கீடு இவ்வளவு மட்டுமே என்பதும் குறிப்பிடத்தக்கது. காங்கிரஸ் கட்சி இக்காலகட்டத்தில் 139.01 கோடி ரூபாய் அளவிலான நன்கொடை வந்துள்ளதாகத் தேர்தல் ஆணையத்திடம் அறிக்கை கொடுத்துள்ளது குறிப்பிடத்தக்கது. காங்கிரஸ் பெற்ற தொகையை விடவும் கிட்டதட்ட 5 மடங்கு தொகையைப் பாஜக பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது. மேற்கு வங்காளத்தின் திரிணமூல் காங்கிரஸ் கட்சி 8.08 கோடி ரூபாயும், இந்திய கம்யூனிஸ்ட் கட்சி 19.69 கோடி ரூபாயும், என்சிபி கட்சி 59.64 கோடி ரூபாய் அளவிலான நன்கொடையும் பெற்றுள்ளன. தெலுங்கான ராஷ்டிர சமதி 130.46 கோடி, சிவ சேனா 111.4 கோடி, ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் கட்சி 92.7 கோடி, பிஜூ ஜனதா தல் 90.35 கோடி, அதிமுக 89.6 கோடி, திமுக 64.90 கோடி ரூபாய் நன்கொடை பெற்றதாகத் தகவல் தெரியவருகிறது.
இக்காலக் கட்டத்தில் பாஜகவுக்கு பல கார்பரேட் நிறுவனங்கள் அதிகளவிலான தொகையை நன்கொடை அளித்துள்ளது குறிப்பிடத்தக்கது.
மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.