கடந்த ஆட்சியில், கடந்த முறை ஊரடங்கில், குடும்ப அட்டைக்கு கொரோனா நிவரணமாக கொடுத்த பணத்தை இரண்டு நான்கு மடங்காக மக்களிடம் இருந்து தட்டி பறிக்கப்பட்டது, மின்வாரிய அதிகாரிகளின் பொறுப்பற்ற நிருவாகம் மூலம், ஆனால் நடப்பு ஆட்சியில் அதே அதிகாரிகளைச் சிறப்பாகச் செயல்பட வைத்து பாராட்டு பெறுகிறார் தமிழ்நாட்டு முதல்வர் ஸ்டாலின் அவர்கள். 28,வைகாசி,தமிழ்த்தொடராண்டு-5123: அப்பாவி ஏழை எளிய மக்களில் இருந்து, திரைப்பேரறிமுகங்கள் வரை எவ்வளவோ எடுத்துச் சொல்லியும், கணக்குக்காட்டியும், காதில் வாங்கிக் கொள்ளமல், தமிழ்நாட்டு மக்களிடம் இருந்து கொரோனா பாதிப்பு காலத்திலும் ஏராளமான பணத்தைத் தட்டி பறித்தது மின்கட்டணங்கள் மூலம், மின்வாரிய அதிகாரிகளின் பொறுப்பற்ற நிருவாக முன்னெடுப்பில். மின் வாரியக் கணக்கீட்டு முறையின்படி அந்தந்த மாதங்களில் கணக்கிட்டு மின்கட்டணம் வசூலித்திட வேண்டும். மாறாக எத்தனைக் கணக்கீடுகள் தள்ளி ஒட்டுமொத்தமாக மின் கணக்கீடு செய்கிறோமோ அந்த அளவுக்கு நுகர்வோர் தண்டமாக மின்வாரியத்திற்கு ஏராளமான தொகையைக் கட்ட வேண்டும். எடுத்தக்காட்டாக, பயன்படுத்திய மின்அலகுகளை, நானூற்று ஐம்பது, நானூற்று ஐம்பதாக மூன்று முறைகளுக்கு மின் வாரியக் கணக்கீட்டு முறையின்படி கணக்கிட்டால் நுகர்வோர் மின்வாரியத்திற்கு செலுத்த வேண்டிய தொகை ரூபாய் 980X3 என்று மொத்தம் ரூபாய் 2940 ஆகும். ஆனால் ஒட்டுமொத்தமாக 1350 மின் அலகுகளுக்கு மின் வாரியக் கணக்கீட்டு முறையின்படி கணக்கிட்டால் நுகர்வோர் மின்வாரியத்திற்கு செலுத்த வேண்டிய தொகை ரூபாய் 7390 ஆகும். கடந்த முறை இப்படியான தவறான கணக்கெடுப்பின் மூலம் மின் நுகர்வோர்களிடம் இருந்து ஏராளமான தொகை கொரோனா காலத்திலும் மக்களிடம் இருந்து பிடுங்கியது மின் வாரியம். ஆனால் தற்போது அதே மின்வாரிய அதிகாரிகள் நடப்பு கணக்கெடுப்பை கணக்கெடுக்க வீட்டிற்கு வராத போதும் கடந்த மாதக் கணக்கின்படி தொகை செலுத்தும் வகைக்கு கணக்கீடு செய்து நுகர்வோர்களின் செல்பேசிக்கு கட்டணக்கணக்கை அனுப்பிவிட்டார்கள். அந்தத் தொகையை பதினைந்து நாட்கள் தாமதமாகக் கட்டலாம் என்று தற்போதைய அரசு சலுகை வழங்கியுள்ளது. ஆதிகாரிகள் அவர்களேதான்! தலைமை சரியாக இருந்தால் பொதுமக்களுக்கு பாதிப்பும், பாதிப்பின்மையும் மாறுகிறது என்று அறிவுறுத்துகிறது இரண்டு ஆட்சிகளின் நடவடிக்கைகளின் ஒப்பீடு. தமிழ்நாட்டுத் தலைமையை மாற்றியது போல இந்தியத் தலைமையையும் மாற்றிஅமைக்கும் வகைக்குச் செயல்படுவோம்.
கடந்த ஆட்சியில், கடந்த முறை ஊரடங்கில், குடும்ப அட்டைக்கு கொரோனா நிவரணமாக கொடுத்த பணத்தை இரண்டு நான்கு மடங்காக மக்களிடம் இருந்து தட்டி பறிக்கப்பட்டது, மின்வாரிய அதிகாரிகளின் பொறுப்பற்ற நிருவாகம் மூலம். ஆனால் நடப்பு ஆட்சியில் அதே அதிகாரிகளைச் சிறப்பாகச் செயல்பட வைத்து பாராட்டு பெறுகிறார் தமிழ்நாட்டு முதல்வர் ஸ்டாலின் அவர்கள்.
மாநில ஆட்சிக்கு தனிப்பெரும்பான்மைதாம் சிறப்பாக அமையும், அதே சமயம் ஒன்றிய ஆட்சியில் தனிப்பெரும்பான்மை அமைந்த போதெல்லாம் மக்கள் விரோத ஆதிக்கப்பாடுகளே முன்னெடுக்கப்பட்டிருந்தன என்பது இந்திய வரலாறு தெரிவிக்கும் உண்மையாகும்! காரணம் ஒன்றிய ஆட்சி என்பதால், அதற்கு மாநிலங்களுக்கு சமவாய்ப்பான, கூட்டணி ஆட்சிகளே சரிப்பட்டு வந்திருக்கின்றன. இந்த முறை தனிப்பெரும்பான்மையாக பாஜகவை ஆளவிட்டு நாம்அடைந்த அல்லல்கள் இனி வேண்டவே வேண்டாம்! அடுத்த முறை இந்திய ஒன்றியத்திற்கு மாநிலக் கட்சிகளின் கூட்டணி ஆட்சியையே முன்னெடுப்போம்.
மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.