Show all

கீச்சுவில் நேற்று இந்திய அளவில் முதலிடத் தலைப்பான செய்தி! ஜெயராஜ் மற்றும் அவரது மகன் பென்னிசுக்கு நியாயம் வழங்கு

கோவில்பட்டியில் உள்ள கிளைச் சிறையில் விசாரணைக் கைதிகளாக அடைக்கப்பட்ட ஜெயராஜ் மற்றும் அவரது மகன் அடுத்தடுத்து மரணடைந்தனர். இந்த நிகழ்வு இந்திய அளவில் கடும் அதிர்வலைகளை ஏற்படுத்தி உள்ளது.

13,ஆனி,தமிழ்த்தொடராண்டு-5122: கீச்சுவில் நேற்று இந்திய அளவில் முதலிடத் தலைப்பான செய்தியாகியது: ஜெயராஜ் மற்றும் அவரது மகன் பென்னிசுக்கு நியாயம் வழங்கு என்கிற தலைப்பு

சாத்தான்குளத்தை சேர்ந்த வணிகர்களான ஜெயராஜ் மற்றும் அவரது மகன் பென்னிக்ஸ் இருவரும் ஊரடங்கு விதிகளை மீறியதாக காவல்துறையினரால் கைது செய்யப்பட்டனர்.

கோவில்பட்டியில் உள்ள கிளைச் சிறையில் விசாரணைக் கைதிகளாக அடைக்கப்பட்ட இருவரும் அடுத்தடுத்து மரணடைந்தனர். இந்த நிகழ்வு கடும் அதிர்வலைகளை ஏற்படுத்தி உள்ளது.

கைது செய்யப்பட்ட ஜெயராஜ், பென்னிக்சை சாத்தான்குளம் காவல்துறையினர் விசாரணை என்ற பெயரில் அடித்தே கொன்றுவிட்டதாக குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன.

இருவரின் உயிரிழப்புக்கு காரணமான காவலர்கள் மீது கொலை வழக்குப்பதிவு செய்து தண்டனை வழங்க வலியுறுத்தி தமிழகத்தில் வியாபாரிகள் கடைகளை அடைத்து போராட்டம் நடத்தி வருகின்றனர்.

இதற்கிடையில், சாத்தான்குளம் தந்தை மகன் உயிரிழந்த முன்னெடுப்பு தற்போது விண்காட்சியாய் விரிந்து வருகிறது. பல்வேறு தரப்பினரும் உயிரிழந்தவர்களுக்கு நீயாயம் கேட்டு சமூகவலைதளத்தில் தங்கள் கருத்துக்களை பகிர்ந்து வருகின்றனர்.

குறிப்பாக கீச்சுவில் இந்தச் செய்தி நேற்று இந்திய அளவில் தலைப்பானது. சமூக வலைதளஆர்வலர்கள், திரைப் பேரறிமுகங்கள், அரசியல் விமர்சகர்கள், விளையாட்டுத்துறையினர் என அனைத்துத் தரப்பினரும் இந்த தலைப்பாக்கத்தை பயன்படுத்தி ஜெயராஜ் மற்றும் பென்னிக்சுக்கு நீதி கிடைக்க வேண்டும்என தங்கள் கருத்துக்களை பகிர்ந்து வருகின்றனர்.

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.