வெளிநாட்டிலிருக்கும் மலையாளிகள் பலரும் கேரளாவுக்குத் திரும்பிக் கொண்டிருக்கின்றனர். அப்படி வருபவர்களை, ‘கேரளாவுக்கு வர வேண்டுமென்றால், கொரோனா பரிசோதனை செய்து அறிக்கையுடன் வர வேண்டும்’ என்று கேரள முதல்வர் பினராயி விஜயன் அறிவித்துள்ளதுதான் சர்ச்சைக்குக் காரணம். 13,ஆனி,தமிழ்த்தொடராண்டு-5122: கொரோனா தடுப்பு நடவடிக்கையில் இந்தியாவுக்கே முன்மாதிரியாகத் திகழும் கேரள அரசு, இப்போது ஒரு சர்ச்சையில் சிக்கியுள்ளது. கொரோனா அச்சம் காரணமாக வெளிநாட்டிலிருக்கும் மலையாளிகள் பலரும் கேரளாவுக்குத் திரும்பிக் கொண்டிருக்கின்றனர். அப்படி வருபவர்களை, ‘கேரளாவுக்கு வர வேண்டுமென்றால், கொரோனா பரிசோதனை செய்து அறிக்கையுடன் வர வேண்டும்’ என்று கேரள முதல்வர் பினராயி விஜயன் அறிவித்துள்ளதுதான் சர்ச்சைக்குக் காரணம். ‘‘தொற்று உள்ளவர்கள் தனி விமானத்திலும், தொற்று இல்லாதவர்கள் தனி விமானத்திலும் வர வேண்டும் என்பதற்காகத்தான், கொரோனா பரிசோதனை செய்து அறிக்கையுடன் வர வேண்டும்’ என்று முதல்வர் பினராயி விஜயன் கூறுவதாகச் சொல்கின்றனர். ஆனால் வளைகுடா நாடுகளில் கொரோனா சோதனை செய்துகொள்வது இயலாத காரியம். அப்படி வசதி இல்லாத நாடுகளுக்கு நடுவண் அரசு மூலம் சோதனைக் கருவிகள் அனுப்பிவைக்க ஏற்பாடு செய்யப்படும்’ என்கிறது கேரள அரசு. சோதனைக் கருவிகளை அனுப்பினாலும் சம்பந்தப்பட்ட நாடுகள் அதை ஏற்றுக்கொள்ளுமா, ஏற்றுக்கொண்டாலும் உடனடியாக நடைமுறைப்படுத்துமா எனப் பல கேள்விகள் எழுகின்றன. கொரோனாவால் கேரளாவில் உயிரிழந்தவர்களைவிட வெளிநாடுகளில் உயிரிழந்த மலையாளிகளின் எண்ணிக்கை பத்து மடங்கு அதிகம். எனவே, சொந்த ஊர் வந்தால் உயிர் பிழைக்கலாம்’ என்றுதான் விமானம் பிடித்து ஊருக்கு வர அவசரம் காட்டுகின்றனர். இதில் கொரோனா பரிசோதனை அறிக்கை கேட்பது முட்டுக்கட்டை போடும் செயல். இந்த பாட்டில் கால தாமதம் செய்வது மரணத்தை அதிகரிக்கும் என்பதால் நிபந்தனையில்லாமல் அவர்களை ஊருக்குள் அனுமதிக்க வேண்டும்’’ என்கிறார்கள் கேரள மக்கள். கேரளத்தில் பெரிய அளவில் தொழிற்சாலைகள் கிடையாது. வேலைக்காகவும் வியாபாரத்துக்காகவும் கேரள மாநிலத்தைச் சேர்ந்த சுமார் 27,00,000 பேர் உலகின் பிற நாடுகளில் வசித்துவருகின்றனர். வளைகுடா நாடுகளில் தொழில் செய்பவர்களால் கிடைக்கும் வருவாய்தான் கேரளத்தின் முதன்மையான வருவாய். அவர்கள் மூலம் கேரளத்துக்கு ஓராண்டுக்கு சுமார் 1,00,000 கோடி ரூபாய் வருமானம் கிடைக்கிறது! இது கேரளப் பொருளாதாரத்தில் 30 விழுக்காடு ஆகும். வெளிநாடுகளில் பரிதவிக்கும் மக்களின் வேதனைக் குரல்களையும் கேரள அரசு கவனத்தில் எடுத்துக்கொண்டு உரிய சிறப்பான நடவடிக்கைகளை முன்னெடுக்க வேண்டும் என்று நாமும் கேட்டுக் கொள்கிறோம்.
இது மட்டுமல்ல... பேரிடர் காலங்களில் கேரளத்துக்கு உதவுவதில் பெரும்பங்கு வகிப்பதும் வெளிநாடுவாழ் மலையாளி களே. வெளிநாடுவாழ் மலையாளிகளால் இவ்வளவு பலனடைந்தும் அவர்களைச் சொந்த ஊருக்குக் கொண்டுவரும் பாட்டில் கேரள அரசு போதிய அக்கறை காட்டவில்லை என்ற குரல்கள் கேட்கின்றன. எதிர்க்கட்சிகளும் இந்த முன்னெடுப்பைக் கையிலெடுத்து போராட்டத்தில் ஈடுபட்டுள்ளன.
மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.



