சென்னை வண்ணாரப்பேட்டையில் ஒன்றிய பாஜக அரசின், குடியுரிமைச் சட்டத் திருத்தத்திற்கு எதிரான போராட்டத்தில், காவல்துறையினரின் அடாவடியைத் தொடர்ந்து- தமிழகம் முழுவதுமாக போராட்டம் விரிவடைந்து வருகிறது. இந்தப் போரட்டங்களை இஸ்லாமியர்கள் முன்னெடுப்பது- பெரிய மதக்கலவரம் போல எச்.இராஜவிற்கு மகிழ்ச்சி அளிப்பதாக- சங்கிலித் தொடர் கீச்சுப்பதிவிட்டு கொண்டாடி வருகிறார் 03,மாசி,தமிழ்தொடர்ஆண்டு-5121: சென்னை வண்ணாரப்பேட்டையில் ஒன்றிய பாஜக அரசின், குடியுரிமைச் சட்டத் திருத்தத்திற்கு எதிரான போராட்டத்தில், காவல்துறையினரின் அடாவடியைத் தொடர்ந்து- தமிழகம் முழுவதுமாக போராட்டம் விரிவடைந்து வருகிறது. இந்தப் போராட்டத்தை முஸ்லிம் அமைப்புகள் முன்னெடுத்தன என்பதே எச்.இராஜாவின் உச்சகட்ட மகிழ்ச்சிக்கும் கொண்டாட்டத்திற்கும் காரணம். தமிழகத்தில் முகமதியர்கள் போராட்டம் என்பது எச்.இராஜாவிற்கு அவ்வளவு மகிழ்ச்சியைத் தருவதாக இருக்கிறது. உண்மையில் அவர் சார்ந்திருக்கும் கட்சியின் நோக்கமான ஹிந்துத்துவாவாதிகளுக்கும், முஸ்லிம்களுக்குமான போரட்டம் என்பதல்ல இது. போராடுகிறவர்கள் முகமதியர்கள் போராட்டத்திற்கான காரணியாளர்கள் ஹிந்துத்துவாவாதிகள் அவ்வளவுதான். அவர்கள் எதிர்பார்க்கிற மதவாதப் பிரிவினைச் சார்ந்தல்ல இந்தப் போராட்டம். இதில் போராடிய பெண்களை காவல்துறையினர் தாக்கியதாக கூறப்படுகிறது.. அதேபோல ஒரு முதியவர் உயிரிழந்துவிட்டதாகவும் சொல்லப்பட்டது. ஆனால் இதனை காவல்துறையினர் தரப்பு மறுத்து விளக்கம் அளித்தது. பெண்களைத் தாக்கிய காவல்துறையினருக்கு திமுக தலைவர் முக ஸ்டாலின், நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் உட்பட பலரும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில், எச்.ராஜா இந்த கலவரம் தொடர்பாக சங்கிலித் தொடராக கீச்சுகளை பதிவிட்டு மகிழ்ச்சியைக் கொண்டாடி வருகிறார். “தேசப் பிரிவினைக்கு முன் இருந்த கலவரச் சூழ்நிலையைக் கொண்டுவரத் துடிக்கும் இஸ்லாமிய சதி துவங்கி விட்டது. மற்றுமொரு பிரிவினையை அனுமதியோம். ஹிந்துகளே உஷார்” என்பது எச். இராஜவின் மகிழ்ச்சிக் கொண்டாட்ட அண்மைக் கீச்சுவாகும்.
மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.



