Show all

சரக்குசேவைவரி, எளியவர்களைச் சுரண்டும் ‘பிரம்மாண்ட சுயநலவரி’:மம்தா பானர்ஜி

20,ஐப்பசி,தமிழ்தொடர்ஆண்டு-5119: ராகுலைத் தொடர்ந்து, மேற்கு வங்க முதலமைச்சர் மம்தா பானர்ஜியும் சரக்குமற்றும்சேவை வரிக்கு புது விளக்கம் கொடுத்துள்ளார்.

கடந்த மாதம் காங்கிரஸ் துணைத் தலைவர் ராகுல் காந்தி, சரக்குமற்றும்சேவை வரி குறித்து கடுமையாக விமர்சித்திருந்தார். அதற்கு, ‘கப்பார் சிங் வரிஎன புது விளக்கம் கொடுத்தார். கப்பார் சிங், ஹிந்தி திரைத் துறையில் பிரபலமான வில்லன் கதாபாத்திரம் ஆவார்.

இதனைக் காந்தி நகரில் நடைபெற்ற தேர்தல் கருத்துப் பரப்புதல் கூட்டத்தின் போது ராகுல் தெரிவித்தார். ஏனென்றால் சிறு தொழில்கள் மற்றும் நிறுவனங்களின் அழிவிற்கு சரக்குமற்றும்சேவை வரி வழிவகுத்துள்ளதாக குற்றம்சாட்டினார்.

மக்களைத் தொந்தரவு செய்ய பிரமாண்ட சுயநல வரி. வேலைகளை ஒழித்துக் கட்டுவதற்கான வரி. வணிகங்களை காயப்படுத்துவதற்கான வரி. பொருளாதாரத்தை முடித்து வைப்பதற்கான வரி சரக்குமற்றும்சேவை வரி என்ற விளக்கத்தோடு ‘பிரமாண்ட சுயநலவரிஎன்று மேற்கு வங்க முதலமைச்சர் மம்தா பானர்ஜி, தனது கீச்சுவில் பதிவிட்டுள்ளார்.

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.