பாவேந்தர் பாரதிதாசனாரின் இந்தப் பாடல் வரிகள் மிகப் பேரறிமுகமானது. இக்கவிதையை மேற்கோள் காட்டிப் பேசாத திராவிட இயக்க மேடைப் பேச்சாளர்கள் யாரும் இருக்க முடியாது. தளபதி மு.க.ஸ்டாலின் அவர்கள் பலமுறை பல மேடைகளில் இந்த பாட்டுவரிகளை சொல்லிக் காட்டியிருக்கிறார். தலைவர் கலைஞருக்கு மிகவும் பிடித்த கவிதை இது. இப்போது குறும்புக்கார நட்டாவை குட்டிட ஸ்டாலினை அழைக்க இந்த கவிதை முழங்கப்படுகிறது. 09,ஆவணி,தமிழ்த்தொடராண்டு-5122: தமிழகத்தில் திமுக போன்ற பிரிவினைவாத சக்திகள் வலுப்பெறக் கூடாது என பாஜக இந்திய அளவிலான தலைவர் ஜே.பி.நட்டா குறும்பளந்திருக்கிறார். இந்தியாவிலேயே அனைத்துத் துறைகளிலும் தமிழ்நாடு முன்னிலை வகிக்கக் காரணமான திமுகவை- இந்திய நாட்டை சீரழிவின் உச்சத்திற்கு கொண்டு சென்றுகொண்டிருக்கும் ஆதிக்கவாத பாஜக- சீண்டியிருக்கிற இந்தப் பேரவலத்தை உடனடியாக முடிவுக்குக்கு கொண்டுவர- பவேந்தர் பாடல் மூலமாக மு.க.ஸ்டாலினை எழுச்சி கொள்ள அழைக்க வேண்டிய கட்டாயம் தமிழக மக்களுக்கு எழுந்திருக்கிறது. பூட்டிய இருப்புக் கூட்டின் கதவு பாவேந்தர் பாரதிதாசனாரின் இந்தப் பாடல் மிகப் பேரறிமுகமானது. இக்கவிதையை மேற்கோள் காட்டிப் பேசாத திராவிட இயக்க மேடைப் பேச்சாளர்கள் யாரும் இருக்க முடியாது. மு.க.ஸ்டாலின் அவர்கள் பலமுறை பல மேடைகளில் இந்த பாட்டுவரிகளை சொல்லிக் காட்டியிருக்கிறார். தலைவர் கலைஞருக்கு மிகவும் பிடித்த கவிதை இது. பாரதிதாசன் எழுதிய அகவல்பா வடிவிலான இப்பாடல் எப்போது எழுதப்பட்டது யாரால் முதலில் பாடப்பட்டது என்பதை இக்கால இளைஞர்கள் தெரிந்து கொள்வது மிகத்தேவை. இந்திய விடுதலைக்கு இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு தைத்திங்களில் அப்போதைய தென்னாற்காடு மாவட்டத்தில் கடலூர் அருகே புதுப்பேட்டை என்னும் ஊரில் திராவிட மாணவர் மாநாடு ஒன்று நடத்தப்பட்டது. அதற்குத் தலைமை வகித்தவர் திரு ஈ.வெ.கி. சம்பத் அவர்கள். முதல்முதலாக மாநாட்டு தலைமைப் பொறுப்பேற்று முழுநேர அரசியலில் சம்பத் அவர்கள் ஈடுபட காரணமாக அமைந்தது இந்த மாநாடுதான். அந்த மாநாடு அமைப்பாளராக இருந்து திறம்பட நடத்திக் காட்டியவர் ஆசிரியர் திரு திராவிடமணி அவர்கள். இவரின் பள்ளி மாணவராக இருந்தவர்தான் திராவிடர்கழக தலைவர் வீரமணி. அந்த மாநாட்டில் அவரும் இளம் அகவையாளராகப் பேசியிருக்கிறார். இந்த மாணவர் மாநாட்டுக்குத்தான் பாவேந்தர் பாரதிதாசன் அவர்கள் வாழ்த்துப் பாடலாக இப்பாடலை எழுதி அனுப்பிவைத்தார். அதை அன்றைக்கு அந்த மாநாட்டில் உணர்ச்சிப்பொங்க படித்து எழுச்சி ஊட்டியவர். இனமானப் பேராசிரியர் திரு க.அன்பழகனார் அவர்கள்தான்.
திறக்கப் பட்டது! சிறுத்தையே வெளியில்வா!
எலிஎன உன்னை இகழ்ந்தவர் நடுங்கப்
புலிஎனச் செயல்செய்யப் புறப்படு வெளியில்!
நம்பினை பகலினை நள்ளிருள் என்றே
சிம்புட் பறவையே சிறகைவிரி! எழு!
சிங்க இளைஞனே திருப்புமுகம்! திறவிழி!
இங்குன் நாட்டுக் கிழிகழுதை ஆட்சியா?
கைவிரித் துவந்த கயவர், நம்மிடைப்
பொய்வி ரித்துநம் புலன்கள் மறைத்துத்
தமிழுக்கு விலங்கிட்டுத் தாயகம் பற்றி
நமக்குள உரிமை தமக்கென் பார்எனில்,
வழிவழி வந்தஉன் மறத்தனம் எங்கே?
மொழிப்பற் றெங்கே? விழிப்புற் றெழுக!
இகழ்ச்சி நேர்ந்தால் இறப்போம் என்றும்
புகழ்ச்சி யேஎம் பூணாம் என்றும்
வையம் ஆண்ட வண்டமிழ் மரபே
கையி ருப்பைக் காட்ட எழுந்திரு!
குறிக்கும்உன் இளைஞர் கூட்டம் எங்கே?
மறிக்கொணாக் கடல்போல் மாப்பகை மேல்விடு!
நன்மொழிக்கு விடுதலை நல்கிட எழுந்திரு!
பொன்மொ ழிக்குநீ புதுமை ஏற்றுவாய்!
மக்களை ஒன்றுசேர்! வாழ்வை யுயர்த்துக!
கைக்குள திறமை காட்ட எழுந்திரு!
வாழ்க இளைஞனே, வாழ்க நின்கூட்டம்!
வாழ்க திராவிட நாடு!
வாழ்கநின் வையத்து மாப்புகழ் நன்றே!
மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.



