கூகுள் பே, அமேசான் பே போன்ற பணப்பரிவர்த்தனை நிறுவனங்கள், சேகரித்த இந்திய வாடிக்கையாளர்களின் தகவல்களை, இந்திய வலை சேவையகங்களில் மட்டுமே சேமிக்க வேண்டும். இந்தியக் கட்டுப்பாட்டு வங்கி புதிதாக வரைமுறையை கொண்டு வந்துள்ளது. 16,ஆனி,தமிழ்தொடர்ஆண்டு-5121: கூகுள் நிறுவனம், ஓலா நிறுவனம், உபேர் நிறுவனம், அமேசான் போன்ற முன்னணி நிறுவனங்கள் இந்தியாவில் மக்கள் அதிகமாக பணபரிவர்த்தனை செய்வதற்கு செயல்பட்டு வருகின்றன. இந்த நிறுவனங்கள் சேகரித்த வாடிக்கையாளர்களின் அனைத்து தகவல்களும் வெளிநாடுகளில் உள்ள வலை சேவையகங்களில் சேமிக்கப்படுகிறது. இதன் பொருட்டு இந்தியக் கட்டுப்பாட்டு வங்கி புதிதாக வரைமுறையை கொண்டு வந்துள்ளது. இதனால் கூகுள் பே, அமேசான் பே உள்ளிட்ட நிறுவனங்கள்; இதற்கான நடவடிக்கை முயற்சியில் இறங்கியுள்ளன. இந்த தகவல்கள் வெளிநாடுகளில் உள்ள வலைசேவையகங்களில் சேமிப்பதால் நமது மக்களின் கமுக்கங்கள் அனைத்தும் திருடப்படலாம் என்று இந்த நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது. இந்திய மக்கள் தகவல்கள் இந்தியத் வலைசேவையகங்களில் மட்டுமே சேமிக்க வேண்டும் என்பது சரிதான். ஆனால், தற்போது தமிழ், இணையத்தில் உலக அளவில் ஆட்சி செய்து வருகிறது. நடுவண் அரசு ஹிந்தி, ஆங்கிலம் மட்டுமே என்று, இணையத்தில் ஆட்சி புரிந்து வரும் தமிழுக்கு தடை ஏதும் செய்யாமல் இருக்க வேண்டும். ஏனென்றால் ஆட்சி இந்தியாவில் ஹிந்தி ஆங்கிலம் மட்டுமே முன்னெடுக்கப்படுகிறது. இணைய இந்தியாவில் தமிழ், ஆங்கிலம், அடுத்த நிலையில்தான் ஹிந்தி. ஏனென்றால் இணையம் மக்களிடம் இருக்கிறது. -தமிழர்க்குத் தொடர்ஆண்டு மட்டுமல்ல, தொடர் நாள் கணக்கும் உண்டு. இன்று தமிழ்த் தொடர்நாள் எண்:18,70,200.
இந்திய மக்களின் தகவல்கள் இந்தியாவில் உள்ள வலை சேவையகங்களில் மட்டுமே சேமித்து வைக்க வேண்டும் என்பதாகும். இதனைக் குறித்து அடுத்த 24 மணி நேரத்தில் தகவல் தெரிவிக்க வேண்டும் என்று கட்டளையிட்டுள்ளது இந்தியக் கட்டுப்பாட்டு வங்கி.
மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.



