Show all

சம்பள பாக்கிக்காக போராட்டம்! சென்னை மாநகர போக்குவரத்து ஊழியர்கள் இன்று காலை திடீரென வேலை நிறுத்தம்.

சென்னை அரசு போக்குவரத்து ஊழியர்கள் தங்களுக்கு கடந்த மாதச் சம்பளம் இன்னும் வழங்கப்படவில்லை என்பதை கண்டித்து திடீர் வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டு உள்ளனர்.

16,ஆனி,தமிழ்தொடர்ஆண்டு-5121: சென்னை மாநகர போக்குவரத்து ஊழியர்கள் இன்று காலை திடீரென வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டனர். 

கடந்த மாதத்திற்கு வழங்கப்பட வேண்டிய மாத ஊதியம் தற்போது வரை வழங்கப்படவில்லை. மேலும் மாத ஊதியத்தில் 65 விழுக்காடு மட்டுமே ஊழியர்களுக்கு வழங்கப்பட உள்ளதாக போக்குவரத்து ஊழியர்களுக்கு தகவல் கிடைத்துள்ளதாக போக்குவரத்து ஊழியர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். 

இன்று இரவுக்குள் ஊழியர்கள் அனைவருக்கும் வங்கி மூலமாக அவரவர் வங்கி கணக்குகளில் ஊதியம் செலுத்தப்படும். இது தொடர்பாக விளக்கம் அளித்துள்ளனர் துறை அதிகாரிகள்,

சென்னை அண்ணா நகர், பூவிருந்தவல்லி, அம்பத்தூர் ஆகிய பணிமனைகளில் இருந்து பேருந்துகள் இயக்கப்படவில்லை. மேலும் கிண்டி, ஐயப்பன்தாங்கள் உள்ளிட்ட பணிமனைகளில் இருந்து குறைந்த அளவிலேயே பேருந்துகள் இயக்கப்படுகின்றன. 

போக்குவரத்து ஊழியர்களின் திடீர் வேலை நிறுத்தப் போராட்டத்தால் பள்ளி, கல்லூரி மாணவர்கள், வேலைக்கு செல்லும் பணியாளர்கள் என பலதரப்பட்ட மக்களும் பேருந்து சேவை கிடைக்காமல் அவதியடைந்து வருகின்றனர். அரசின் விரைவான நடவடிக்கையை எதிர் நோக்கியுள்ளனர் பொதுமக்கள்.

-தமிழர்க்குத் தொடர்ஆண்டு மட்டுமல்ல, தொடர் நாள் கணக்கும் உண்டு. இன்று தமிழ்த் தொடர்நாள் எண்:18,70,200.

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.