Show all

லாஸ்லியாவும், மதுமிதாவும்! பிக்பாஸ் பருவம் 3 நிகழ்ச்சியில் அதிக பார்வையாளர்களால் விரும்பப்பட்டு முதலிடத்தில் நிற்கின்றனர்

இன்று பிக்பாஸ் நிகழ்ச்சியின் வெளியேற்றப் படலம் வெற்றிகரமாக நடந்தது. வெளியேற்றத்திற்கு முன்மொழியப் பட்டிருக்கும் போட்டியாளர்கள் 1.மீரா, 2.கவின், 3.சாக்சி 4.சரவணன் 5.பாத்திமா பாபு 6.சேரன் 7.மதுமிதா

16,ஆனி,தமிழ்தொடர்ஆண்டு-5121: பிக்பாஸ் பருவம் மூன்று நிகழ்ச்சி எதிர்பார்த்;ததை விட பரபரப்பாக சென்று கொண்டிருக்;கிறது.

கமல் தொகுத்துவழங்கும் பிக் பாஸ் நிகழ்ச்சி விறுவிறுப்பான கட்டத்தை நோக்கி அடியெடுத்து வைக்கும் நிலையில், பலரின் உண்மை முகங்கள் வெளிவர தொடங்கியுள்ளன. அந்தவகையில் லாஸ்லியாவை தனது மகள் என பெருமிதம் கொண்ட இயக்குனர் சேரன், இன்று இடம்பெற்ற முதலாவது வெளியேற்றும் படலத்தில் லாஸ்லியாவின் பெயரை கூறி பிக்பாஸ் பார்வையாளர்களை அதிர்ச்சியடைய வைத்துள்ளார்.


கடந்த எட்டு நாட்களாக லாஸ்லியா முதலிடத்திலும், சேரன் இரண்டாமிடத்திலும் பிக்பாஸ் பார்வையாளர்களால் விரும்பப் பட்டு வந்தது இணையப் பதிவுகளில் அறிய முடிந்தது. இன்றைக்கு பிக்பாஸ் வெளியேற்றப் படலத்;திற்கு லாஸ்லியாவன் பெயரை சேரன் பரிந்துரைத்து முதுகில் குத்திய நிலையில்;, சேரன் பின்னுக்குத் தள்ளப் பட்டு விட்டார். பிக்பாஸ் போட்டியாளர்களிடம் இருந்து தமிழ்க் கலாச்சாரத்தை மீட்க முயன்ற மதுமிதா சேரன் இருந்த இடத்தில் வைக்கப் பட்டு இரண்டாம் இடத்;;திற்கு உயர்த்தப் பட்டிருக்கிறார்.

தற்போதைய நிலையில் முதல் இரண்டு இடத்தில் வைத்து அதிகம் விரும்பப் படும் இரண்டு போட்டியாளர்கள் லாஸ்லியாவும், மதுமிதாவுமே.

-தமிழர்க்குத் தொடர்ஆண்டு மட்டுமல்ல, தொடர் நாள் கணக்கும் உண்டு. இன்று தமிழ்த் தொடர்நாள் எண்:18,70,200.

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.