Show all

பாவம் தங்க மங்கை சரிதா! இந்தோனேசியாவில் செலவுக்கு பணம் இன்றி தவித்து வருகிறாராம்

16,ஆவணி,தமிழ்தொடர்ஆண்டு-5120: குஜராத் மாநிலம் டாங் நகரின் கர்டாயம்பா என்ற கிராமத்தில், லட்சுமணன், ரேனு தம்பதிக்கு பிறந்தவர் சரிதா. ஏழை உழவர் குடும்பத்தைச் சேர்ந்த சரிதா இந்தோனேசியாவில் நடக்கும் ஆசிய விளையாட்டு போட்டியில் 4×400 மீ தொடர் ஓட்டத்தில் தங்கம் வென்று சாதனை படைத்தார்.

தனது திறமை மூலம் இந்திய நாட்டுக்கே பெருமை தேடி தந்த சரிதா, தற்போது இந்தோனேசியாவில் செலவுக்கு பணம் இல்லாமல் தவித்துவருகிறார்.

ஆசிய விளையாட்டு போட்டி தொடங்கியதில் இருந்து இதுவரை 45 ஆயிரம் ரூபாயை அவருக்கு தர்ஷன் என்பவர்தான்  அனுப்பி உதவி வந்துள்ளார்.

கடந்த இரண்டு ஆண்டுகளில் ஒரு வெள்ளி மற்றும் 3 வெண்கல பதக்கங்கள் வென்றுள்ள இவருக்கு குஜராத் அரசு ரூ.5 லட்சம் பரிசு தொகை அறிவித்தது. ஆனால் இந்தத் தொகை அவருக்கு இன்னும் வந்து சேரவில்லை என கூறப்படுகிறது. இந்த நிலையில்  இந்த ஆண்டு தங்கம் வென்றதற்காக நேற்று குஜராத் முதல்வர் விஜய் ரூபானி தலைமையிலான அரசு ரூ.1 கோடி பரிசு தொகை அறிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

-தமிழர்க்குத் தொடர்ஆண்டு மட்டுமல்ல தொடர் நாள் கணக்கும் உண்டு. இன்று தமிழ்தொடர்நாள் எண்: 18,69,897.

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.