17,ஆவணி,தமிழ்தொடர்ஆண்டு-5120: சென்னை, கோட்டூர்புரத்தில் உள்ள அண்ணா நூற்றாண்டு நூலகம், ஆசியாவிலேயே பெரிய நூலகத்துக்கான தகுதியைப் பெற்றது. மாணவர்கள், ஆராய்ச்சி யாளர்கள், போட்டி தேர்வுகளுக்கு தயாராகும் பட்டதாரிகளுக்கு முன்னோடியாக, இந்த நூலகம் செயல்பட வேண்டும் என்ற நோக்கத்தில் கட்டப்பட்டது. திமுக- அதிமுக போட்டா போட்;டி காரணமாக, இந்த நூலக பராமரிப்பு பணிகளில், பெரும் சுணக்கம் ஏற்பட்டது. ஆனால், சமூக ஆர்வலர்களின் கோரிக்கைகள், சில பல ஊடகங்ளின் முயற்சி, அறங்கூற்றுமன்றத்தின் தலையீடு, காரணமாக, அண்ணா நூற்றாண்டு நூலகம் புதுப்பிக்கப்பட்டு, முழுமையான எண்ணிம மற்றும் முன்னோடி நூலகமாக மாற்றுவதற்கு, பள்ளிக்கல்வி துறை மூலமான நடவடிக்கை நிர்பந்திக்கப் பட்டது. இந்நிலையில், நூலக செயல்பாடுகளின் ஒரு அங்கமாக, பொன்மாலைப் பொழுது என்ற பெயரில், ஒவ்வொரு கிழமையும், சனிக்கிழமை மாலையில், கருத்தரங்கு நிகழ்ச்சி நடக்கிறது. இதில், யாராவது ஒரு விருந்தினர் அழைக்கப்பட்டு, அவர்களின் கருத்துகள், நூலக வாசகர்கள் மத்தியில் எடுத்துரைக்கப்படுகின்றன. தமிழகத்தின் கிராமத் திண்ணைகள், திருமணம், காதணிவிழா, பூப்பு நன்னீராட்டு விழா, வளைகாப்புவிழா போன்ற தமிழர் நிகழ்ச்சிகள், ஆகியவற்றில் தமிழ் மக்களின் கருத்து பரிமாற்ற நிகழ்வுகள் மூலமாகத்தான் பத்தாயிரம் ஆண்டுகள் பழமையும், சான்றாண்மையும் மிக்க தமிழ்க் குடும்ப அமைப்பு முறை கட்டமைக்கப் பட்டு, பல்வேறு சட்ட, அயல் சமுதாய ஆதிக்க மாற்றங்களிலும், தமிழ்சமுகம் காக்கப் பட்டு வருகிறது. தற்காலங்களில், தேநீர்கடைகள், படிப்பகங்கள், நூலகங்கள், கவியரங்கம், பட்டிமன்றம், போன்ற இலக்கிய நிகழ்வுகளில், 'தமிழ் மக்களின் கருத்து பரிமாற்ற நிகழ்வுகள்' சிறப்பாக நடந்தேறி வருகின்றன. சாராயக் கடை நடத்தி சமூகத்தைச் சீரழிக்கும் அவலத்தில் ஈடுபட்;டிருக்கிற மாநில அரசு, கார்ப்பரேட்டுகளுக்கு வாழ்மானம் தருவதற்காக இயற்கையை சீரழித்துக் கொண்டிருக்கும் நடுவண் அரசு இரண்டிடம் இருந்து தமிழ் மக்களைக் காப்பது எப்படியென்ற அல்லாட்டத்தில், 'தமிழ் மக்களின் கருத்து பரிமாற்ற நிகழ்வுகள்' நடத்தி தமிழ்ச் சமூகத்தைக் காப்பதற்கு போதுமான அரங்கங்கள் பற்றாக்குறை இருக்கிற நிலையில், அண்ணா நூற்றாண்டு நூலகத்தில், பொன்மாலைப் பொழுது நிகழ்வில், நடுவண் - மாநில அரசுகளின் குற்றங்குறைகள் அலசப்படுவதாக, தமிழக உளவுத்துறை காவலர்களின் மூலம் கண்காணிக்க அரசு முயன்று வருவதாகவும், அந்த நிகழ்ச்சிக்கு தொடர் மூடுவிழா நடத்தவும் திட்டமிட்டிருப்பதாகவும் தெரிய வருகிறது. நூலகம் அறிவின் கருவறை! அங்;கே வேண்டாம் அறிவுக்கு கட்டுப்பாடும், கருக்கலைப்பும்! -தமிழர்க்குத் தொடர்ஆண்டு மட்டுமல்ல தொடர் நாள் கணக்கும் உண்டு. இன்று தமிழ்தொடர்நாள் எண்: 18,69,898.
மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.



