Show all

3350டன் தங்கம் வெட்டியெடுப்பதற்கான வாய்ப்பு! நடுவண் பாஜக அரசு நாட்டின் வளர்ச்சிக்கு முன்னெடுக்குமா? அல்லது கார்ப்ரேட்டுகளுக்கு தாரைவார்க்குமா

உத்தரப்பிரதேசத்தின் இரு இடங்களில் 3,350 டன் தங்கம் வெட்டியெடுப்பதற்கான வாய்ப்பை கண்டுபிடித்துள்ளதாக செய்தி வெளியாகியுள்ளது. இந்தத் தங்கம் மட்டும் கிடைக்குமாயின், தங்கக் கையிருப்பில், உலகிலேயே மூன்றாவது இடத்துக்கு இந்தியா முன்னேறும் என்று அறிய முடிகிறது. ஆனால் உருப்படியாக நடுவண் பாஜக அரசு எதையாவது செய்து நாட்டின் வளர்ச்சிக்கு உதவுமா? அல்லது கார்ப்ரேட்டுகளுக்கு தாரை வார்க்குமா? என்பதே நமக்கு எழுகிற அச்சம் நிறைந்த கேள்வியாகும்.

09,மாசி,தமிழ்தொடர்ஆண்டு-5121: உத்தரப்பிரதேசத்தின் இரு இடங்களில் 3,350 டன் தங்கம் வெட்டியெடுப்பதற்கான வாய்ப்பை கண்டுபிடித்துள்ளதாக செய்தி வெளியாகியுள்ளது.

இருபது ஆண்டுகள் தேடலுக்கு பிறகு சோன்பத்ரா மற்றும் ஹர்தி ஆகிய இடங்களில் தங்கச் சுரங்கம் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. அதில் சோன்பத்ராவில் 2,700 டன் மற்றும் ஹர்தியில் 650 டன் என மொத்தம் 3,350 டன் தங்கம் இருக்க வாய்ப்புள்ளதாக கணக்கிடப்பட்டுள்ளது. 

இந்த மதிப்புமிக்க தங்கச் சுரங்கத்தை ஏலம் விட அரசு முடிவு செய்துள்ளது. இதற்காக 7 பேர் கொண்ட குழு உருவாக்கப்பட்டு இணைய வழி ஏல நடவடிக்கைகளைக் கவனிக்க உள்ளனர். இந்தச் சுரங்கத்தில் தங்கம் மட்டும் அல்லாது யுரேனியம் போன்ற அரிய தாதுக்கள் உள்ளன என்றும் தெரியவருகிறது. மேலும் தங்கத்தை தவிர இப்பகுதியில் யுரேனியம் போன்ற அரிய தாதுக்கள் இருப்பதற்கான சாத்தியக் கூறுகளையும் அதிகாரிகள் ஆராய்ந்து வருகின்றனர். 

உத்திரபிரதேசத்தின் புண்டேல்கண்ட் மற்றும் விந்தியன் மாவட்டங்களில் தங்கம், வைரம், பிளாட்டினம், சுண்ணாம்பு, கிரானைட், பாஸ்பேட், குவார்ட்ஸ் மற்றும் சீனா களிமண் போன்ற தாதுக்கள் நிறைந்துள்ளன.   

இந்த நிலையில் உலக தங்கக் கூட்டமைப்பின் படி இந்தியாவிடம் தற்போது 626 டன் தங்கம் கையிருப்பு உள்ளது. இது உலகளவு தங்கத்தின் அளவில் 6.6விழுக்காடு ஆகும். மேலும் இந்த அறிக்கையின் படி அதிகபட்சமாக அமெரிக்காவிடம் 8,133.5 டன் தங்கம் உள்ளது. அடுத்தடுத்த இடங்களில் ஜெர்மனியிடம் 3,366 டன், இத்தாலியிடம் 2,451.8 டன், பிரான்ஸிடம் 2,436 டன், ரஷியாவிடம் 2,241.9 டன், சீனாவிடம் 1,948.3 டன், சுவிட்ஸர்லாந்திடம் 1,040 டன் மற்றும் ஜப்பானிடம் 765.2 தங்கம் கையிருப்பு உள்ளது. 

தற்போது மதிப்பிடப்பட்டுள்ள தங்கம் மட்டும் கிடைக்குமாயின், உலகிலேயே மூன்றாவது இடத்துக்கு இந்தியா தள்ளப்படும் என்று அறிய முடிகிறது. ஆனால் உருப்படியாக நடுவண் பாஜக அரசு எதையாவது செய்து நாட்டின் வளர்ச்சிக்கு உதவுமா? அல்லது கார்ப்ரேட்டுகளுக்கு தாரை வார்க்குமா? என்பதே நமக்கு எழுகிற அச்சம் நிறைந்த கேள்வியாகும்.

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.