Show all

முகநூலில் கிளப்பிய பரபரப்பு! ரூபாய் தாளில் காந்தி படத்திற்கு பதிலாக கேட்சே படத்தை வைத்துப் பதிவு

பத்து ரூபாய் தாளின் படத்தில் காந்தியின் புகைப்படத்தை மறைத்து நாதுராம் கோட்சேவின் படத்தை ஒட்டி பதிவிட்டிருந்தவர், பாஜக மாணவர் அமைப்பைச் சேர்ந்தவராம்.

10,வைகாசி,தமிழ்தொடர்ஆண்டு-5122: மத்திய பிரதேசத்தில் பாஜகவின் மாணவர் அமைப்பான அகில பாரதிய வித்யார்த்தி பரிஷத் அமைப்பில் நிர்வாகியாக இருப்பவர் சிவம் சுக்லா. இவர் தனது முகநூல் பக்கத்தில் சில நாட்களுக்கு முன்பு ரூபாய்தாளின் புகைப்படத்தை பதிவிட்டிருந்தார்.

பத்து ரூபாய் தாளின் படத்தில் காந்தியின் புகைப்படத்தை மறைத்து நாதுராம் கோட்சேவின் படத்தை ஒட்டி பதிவிட்டிருந்ததாக தெரிய வருகிறது.

இதற்குப் பல்வேறு தரப்பிலிருந்தும் கடும் கண்டனம் எழுந்தது. மேலும், அவரை கைது செய்யக் கோரி காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சியினர் வலியுறுத்தினர். இதனிடையே, அவர் மீது காங்கிரஸ் கட்சியின் மாணவர் அமைப்பைச் சேர்ந்த நிர்வாகிகள் சிதி காவல் நிலையத்தில் புகார்அளித்தனர். ஆனால், காவல்துறையினர் இதுதொடர்பாக வழக்கு பதிவுசெய்யவில்லை எனக் கூறப்படுகிறது.

இதுகுறித்து காவல் ஆய்வாளர் எஸ்.எம். படேல் கூறும்போது, முகநூலில் வந்த பதிவை வைத்து ஒருவர் மீது வழக்கு பதிவு செய்ய முடியாது. எனினும், இதுகுறித்து விசாரித்துவருகிறோம். தற்போது சம்பந்தப்பட்ட நபர் தலைமறைவாகி உள்ளார். அவரை தேடி வருகிறோம் என்று தெரிவித்துள்ளாராம்.

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.