Show all

நல்ல விசயங்களை நல்லமுறையில் பேசலாமே கட்கரி

மாசு கட்டுப்பாட்டை குறைக்கும் வகையில், மின்கலன்களால் இயக்கப்படும் வாகனங்களை தயாரிக்க வேண்டும்; இல்லாவிடில் கடும் நடவடிக்கை எடுக்கப்படும், என, வாகன தயாரிப்பாளர்களை, நடுவண் சாலை போக்குவரத்து துறை அமைச்சர், நிதின் கட்கரி எச்சரித்துள்ளார்.

சகல அதிகாரம்; உள்ள அரசு, மின்கலன்களால் இயக்கபடும் வாகனங்கள் என்கிற நல்ல விசயத்தை முன்னெடுப்பது எப்படி என்று கூட தெரியாமல் ஆணவ அடவடிகளையே அரங்கேற்ற முயலுவது வேடிக்கை; பாஜகவின் வாடிக்கை.

டில்லியில் நடந்த நிகழ்ச்சியில் நிதின் கட்கரி,

பெட்ரோல், டீசலில் இயக்கப்படும் வாகனங்களால், அதிகளவில் மாசு ஏற்படுகிறது. இதை தடுக்க, மாற்று சக்திக்கு, மாற வேண்டும். மின்கலன்கள் மூலம் இயக்கப்படும், மின்சக்தி சொகுசுந்து, பேருந்து உள்ளிட்ட வாகனங்களை தயாரிக்க வேண்டும். இதற்கு, வாகன தயாரிப்பாளர்கள் மாறாவிட்டால், கடுமையான நடவடிக்கைகளைச் சந்திக்க நேரிடும்.

என்று பேசினார்.

மின் வாகனங்கள் தொடர்பான கொள்கையை, அரசு விரைவில் வெளியிட உள்ளது. எதிர்காலத்தில், இந்தியாவில், மின் வாகனங்கள் அதிகளவில் இயக்கப்படும் என்பது உறுதி.

பெட்ரோல், டீசல் இறக்குமதிக்கு, நாம் அதிகம் செலவிடுகிறோம். இதை, குறைக்க வேண்டும். பருத்தி, நெல், கோதுமை, மூங்கில் கழிவுகளில் இருந்து, எத்தனால் தயாரிக்கலாம். எத்தனாலை பயன்படுத்தி, வாகனங்களை இயக்கினாலும், மாசு ஏற்படாது. இவ்வாறு, நிதின் கட்கரி மிரட்டினார்.

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.