முதல்-அமைச்சர் பதவியில் இருந்து எடப்பாடி பழனிசாமியை விலக்கி விட்டு, தனக்கு சாதகமாக உள்ள ஒருவரை முதல்வர் பதவிக்கு கொண்டு வர வேண்டும் என்று தினகரனும், சசிகலா குடும்பத்து உறுப்பினர்களும் ஆசைப்படுகிறார்கள். இதற்காக அவருக்கு 21 சட்டமன்ற உறுப்பினர்கள் ஆதரவு தெரிவித்துள்ளனர். அந்த 21 சட்டமன்ற உறுப்பினர்களையும் ஆளுநரிடம் அழைத்து சென்ற தினகரன், முதல் அமைச்சர் எடப்பாடி பழனிசாமி மீது தங்களுக்கு நம்பிக்கை இல்லை என்று தனித்தனியாக கடிதம் கொடுக்க வைத்தார். தினகரன் ஆதரவு சட்டமன்ற உறுப்பினர்கள் அனைவரும் புதுச்சேரியில் உள்ள ஒரு சொகுசு விடுதியில் தங்கி இருந்தனர். தினகரனிடம் உள்ள சட்டமன்ற உறுப்பினர்களில் 7 முதல் 10 பேரை இழுக்கும் முயற்சிகளில் எடப்பாடி அணியினர் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர். நேற்று கம்பம் தொகுதி சட்டமன்ற உறுப்பினர் ஜக்கையன் எடப்பாடி அணிக்கு ஆதரவு தெரிவித்தார். இதை தொடர்ந்து தினகரன் ஆதரவு சட்டமன்ற உறுப்பினர்கள் அனைவரும் குடகு மலையில் உள்ள ஒரு சொகுசு விடுதிக்கு மாற்றப்பட்டு உள்ளனர். இதற்கிடையே தினகரன் ஆதரவு சட்டமன்ற உறுப்பினர்கள் 19 பேரும் வருகிற 14 அன்று (வியாழக்கிழமை) கட்டாயம் நேரில் அணியமாக வேண்டும் என்று பேரவைத்தலைவர் தனபால் உத்தரவிட்டுள்ளார். எனவே இன்னும் 5 நாட்களில் தினகரன் ஆதரவு சட்டமன்ற உறுப்பினர்கள் குடகுமலையில் இருந்து சென்னை வந்து பேரவைத்தலைவர் முன்பு அணியமாக வேண்டியதுள்ளது. அதிமுக ஆட்;சியும் கலையக் கூடாது; அதிமுக தனக்கு ஆதரவானவர்கள் வசமும் வரவேண்டும் என்று தினகரன் காய் நகர்த்துவதால், அவரின் ஒவ்வொரு நகர்வுகளும் அவருக்கு மட்டுமல்லாமல் ஆவலோடு அவர் நகர்வுகளை கவனித்து வரும் அனைவருக்கம் ஏமாற்றம் அளிப்பதாகவே இருக்கிறது.
மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.



