இந்த மூன்று கருத்துருக்களுக்காக மோடி மன்னிப்பு கேட்க வேண்டும் என்று இராகுல் காந்தி பாஜகவிற்கு எதிரான களத்தில் மீண்டும் வேகமெடுத்திருக்கிறார். 28,கார்த்திகை,தமிழ்தொடர்ஆண்டு-5121: வடகிழக்கு மாநிலங்கள் பற்றி எரிவதற்கு, 2.இந்திய பொருளாதாரத்தை சீர்குலைத்ததற்கு 3.டெல்லி பாலியல் வன்கொடுமைகளின் தலைநகராக இருப்பதாக ஐந்து ஆண்டுகளுக்கு முன்னதாக கருத்துப் பரப்புதல் செய்து ஆட்சியைப் பிடித்து அது மேலான கொடுமைக்கு சென்றிருக்கிற நிலைமைக்கு என்று அப்போது குஜராத் முதல்வராக இருந்த மோடி பேசிய காணொளியையும் பதிவிட்டு, மோடி மன்னிப்பு கேட்க வேண்டும் என்று இராகுல் காந்தி பாஜகவிற்கு எதிரான களத்தில் மீண்டும் வேகமெடுத்திருக்கிறார். ஜார்கண்டில் நடைபெற்ற தேர்தல் கருத்துப்பரப்பலின் போது பேசிய காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி, மேக் இன் இந்தியா என முழக்கமிட்ட பாஜக ஆட்சியில் இந்தியா தற்போது ரேப் இன் இந்தியா ஆகிவிட்டதாகவும் பெண்களுக்கு எதிரான பாலியல் துன்புறுத்தல்கள் நாட்டில் அதிகரித்து விட்டதாகவும் குற்றம்சாட்டினார். மேலும் உத்தரப்பிரதேசத்தில் பாஜக சட்டப்பேரவை உறுப்பினரால் பாலியல் வல்லுறவுக்கு ஆளாக்கப்பட்ட பெண் வாகனத்தால் மோதப்பட்டபோதும் தலைமைஅமைச்சர் மோடி அமைதி காப்பதாகவும் கூறினார். இந்நிலையில் நாடாளுமன்றத்தில் இன்றைய நிகழ்வுகள் தொடங்கியதுமே மக்களவையிலும், மாநிலங்களவையிலும் பாஜக உறுப்பினர்கள் ராகுல் காந்தியின் பேச்சுக்கு கண்டனம் தெரிவித்தனர். ராகுல் காந்தி மன்னிப்பு கோரவேண்டும் என இரு அவைகளிலும் முழக்கங்களை எழுப்பினர். எனினும் தான் கூறிய கருத்துக்களுக்கு மன்னிப்பு கோர முடியாது என ராகுல் காந்தி திட்டவட்டமாக கூறியுள்ளார். மேலும், குடியுரிமை சட்ட விவகாரத்தில் வடகிழக்கு மாநிலங்களில் பற்றி எரியும் போராட்டத்தை திசை திருப்பவே பாஜக தனது பேச்சுக்கு எதிராக போராடுவதாக அவர் குறிப்பிட்டுள்ளார். மேலும், தனது கீச்சுப்பக்கத்தில் மூன்று கருத்துருக்களைக் குறிப்பிட்டு மோடி மன்னிப்பு கேட்க வேண்டும் என்று ராகுல் காந்தி கூறியுள்ளார். -தமிழர்க்குத் தொடர்ஆண்டு மட்டுமல்ல, தொடர் நாள் கணக்கும் உண்டு. இன்று தமிழ்த் தொடர்நாள் எண்:18,70,366.
மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.



