இந்திய அரசில் பொறுப்பேற்று விடுகிற, வடஇந்தியர் தலைமை கட்சிகளான காங்கிரசும், பாஜகவும் கொண்டுவரும்- வடக்கை மட்டும் கொண்டாடும் ஆதிக்க மனப்பான்மை சட்டங்களை தமிழகம் மட்டும் தனித்து எதிர்த்து வருவது வரலாற்றுக் கட்டாயமாக இருந்து வருகிறது. இந்திய வரலாற்றில் முதன் முறையாக இந்திய பாஜக அரசு கொண்டு வந்துள்ள குடியுரிமை சட்டத்தை அமல்படுத்த மாட்டோம் என்று ஐந்து மாநிலங்கள் தெரிவித்து வரலாறு படைத்திருக்கின்றன. 28,கார்த்திகை,தமிழ்தொடர்ஆண்டு-5121: இந்;திய பாஜக அரசு- ஹிந்துத்துவா, மதவாத போக்கிற்கான- குடியுரிமை சட்டத் திருத்த முன்வரைவை- மக்களவை, மாநிலங்களவை என்று இரண்டு அவைகளிலும் நிறைவேற்றியதோடு குடிஅரசுத் தலைவர் ஒப்புதலும் பெற்று விட்டது. இதற்கு எதிராக இந்தியாவின் வடகிழக்கு மாநிலங்களில் மக்கள் போராட்டங்கள் தொடர்ந்து முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. இந்தக் குடியுரிமை சட்டத்தை அசாம், மேகாலயா, திரிபுரா, மிசோராம், அருணாசல பிரதேசம் ஆகிய மாநிலங்கள் அமல்படுத்த மாட்டோம் என்று தெரிவித்துள்ளன. இந்திய பாஜக அரசு, சரக்கு சேவை வரி என்று மாநிலங்களின் வருவாய் உரிமையைப் பிடுங்கிய போது- இந்தியாவில் தமிழகம் தவிர இந்தியாவின் எந்த மாநிலங்களும் எழுச்சி காட்டவில்லை. நீட் தேர்வு என்று மாநிலங்களின் கல்வி உரிமை பிடுங்கபட்ட போது- இந்தியாவின் எந்த மாநிலங்களும்; இந்த அளவு எழுச்சி காட்ட வில்லை. நியூட்ரினோ மீத்தேன் என்று இந்திய பாஜக அரசு மாநிலங்களின் மண்ணின் உரிமையை பறிக்கும் நடவடிக்கையில் ஈடுபட்ட போது- இந்தியாவின் எந்த மாநிலங்களும் இந்த அளவு எழுச்சி காட்ட வில்லை. தற்போது குடியுரிமை சட்டத்திற்கு ஏறத்தாழ ஒட்டுமொத்த இந்தியாவும் எதிர்ப்பு காட்டத் தொடங்கி, தமிழகம் முன்னெடுத்த ஹிந்தி திணிப்பு எதிர்ப்பு போராட்டத்தை விடவும் தீவிரம் அடைந்து வருகிறது. பணமதிப்பு நீக்கத்தாலும், சரக்கு-சேவை வரியாலும் நாட்டையே பொருளாதார மந்தநிலைக்கு தள்ளிவிட்டு மதம் மதம் என்று மதம் கொண்டு அலைகிறது இந்திய பாஜக ஹிந்துத்துவா அரசு. குடியுரிமைச்சட்டத்தை இந்த ஒட்டுமொத்த இந்தியாவின் எழுச்சிப் போராட்டத்தைத் தாண்டி முன்னெடுக்குமா என்று தொடர்ந்து கவனிப்போம். -தமிழர்க்குத் தொடர்ஆண்டு மட்டுமல்ல, தொடர் நாள் கணக்கும் உண்டு. இன்று தமிழ்த் தொடர்நாள் எண்:18,70,366.
மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.



