Show all

குடும்பத்தை சீரழிக்கும் சாராய வணிகம் அரசுக்கு எதற்கு! என சிந்திக்காமல், வீட்டுக்கே வந்து மது கொடுத்து வாகனவிபத்தை தடுக்க திட்டமாம்

28,புரட்டாசி,தமிழ்தொடர்ஆண்டு-5120: மது அருந்திவிட்டு வாகனம் இயக்கி விபத்தில் சிக்குவோர்களின் எண்ணிக்கையைக் குறைக்கும் வகையில், வீட்டுக்கே மதுவகைகளை வீடு தேடி வந்து கொடுக்க மகாராஷ்டிரா அரசு திட்டமிட்டுள்ளதாம்.

இந்தத் திட்டத்தை செயல்படுத்தினால், நாட்டிலேயே முதல் முறையாக மக்களின் வீட்டுக்கே வந்து மதுவகைகளை அளிக்கும் அரசு என்ற பெருமையைப் பெறுமாம்.

மகாராஷ்டிரா மாநில அரசின் கலால்வரித்துறை அமைச்சர் சந்திரசேகர் பவான்குலே அளித்த பேட்டியில் கூறியதாவது:

மதுவகைகள் உற்பத்தி செய்யும் தொழிற்சாலைக்கு நாங்கள் கொண்டுவரும் திட்டம் மிகப்பெரிய திருப்புமுனையாக அமையும். மக்களின் வீட்டுக்கே மதுவகைகளை அளிக்கும் திட்டம் நாட்டிலேயே மகாராஷ்டிரா அரசுதான் கொண்டுவருகிறது.
இந்தத் திட்டத்தின் முதன்மை நோக்கமே விபத்துக்களைக் குறைப்பதுதான். இருசக்கர, நான்கு சக்கர வாகனம் இயக்குபவர்கள் மது அருந்திவிட்டு வாகனம் இயக்குவதால் விபத்தில் சிக்குகிறார்கள். மதுவகைகள் வீட்டுக்கே வந்தால், குடித்துவிட்டு வாகனம் இயக்குவது குறையும். இதன்மூலம் விபத்துக்களைக் குறைக்கலாம்.
இயங்கலையில், காய்கறிகள், மளிகைபொருட்களை வாங்குதல் செய்வதுபோல், மதுவகைகளையும் மக்கள் பெற முடியும். ஆனால், மதுவகைகளை வாங்குதல் செய்யும் மக்களுக்குக் கண்டிப்பாக ஆதார் அட்டை இருக்க வேண்டும். மதுபாட்டில் அனைத்திலும் ஜியோ டாக் பொருத்தப்பட்டு இருக்கும். பாட்டில்களை வாங்குவோர் யார், விற்போர் யார் எனத் தொடர்ந்து கண்காணிக்க முடியும். இதன் மூலம் சட்டவிரோதமாக மதுவகைகளை விற்பனை செய்வதையும் தடுக்க முடியும் எனத் தெரிவித்தார்.

இதற்கிடையே தேசிய குற்ற ஆவணக் காப்பகத்தின் அறிக்கையின்படி: 
கடந்த மூன்று ஆண்டுகளுக்கு முந்;;;;;தைய கணக்குப் படி: நடந்த விபத்துகளில் 1.5 விழுக்காடு மதுஅருந்திவிட்டு வாகனம் இயக்கியதால் விபத்து நடந்துள்ளது. அதாவது 4.64 லட்சம் விபத்துகள் மதுஅருந்தி வாகனம் இயக்குவதால் நடந்துள்ளது. இதில் 6,295 பேர் காயமடைந்துள்ளனர், 2,988 பேர் மரணடைந்துள்ளனர். சராசரியாக மதுஅருந்தி வாகனம் இயக்குவதால், சராசரியாக நாள் ஒன்றுக்கு 8 பேர் உயிரிழக்கின்றனர் எனப் புள்ளிவிவரம் தெரிவிக்கிறது. 

இவ்வளவு கெடுதி செய்கிற சாரயத்தின் மூலம் மட்டுந்தான் அரசு வருமானம் ஈட்ட முடியுமா? உங்களுக்கு வரி கொடுக்கிற மக்கள் சாராய வணிகம் செய்து வருமானம் ஈட்டவில்லையே. அவர்களுடைய வருமானத்தை வரியாக பெறுவது மட்டுமில்லாமல் அவர்கள் குடும்பத்தை சீரழிக்கும் சாராய வணிகம் அரசுக்கு எதற்கு! என்று சிந்திக்காமல் இது என்ன கேப்புமாறித்தனமான சிந்தனை?

-தமிழர்க்குத் தொடர்ஆண்டு மட்டுமல்ல தொடர் நாள் கணக்கும் உண்டு. இன்று தமிழ்தொடர்நாள் எண்: 18,69,940.

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.