22,புரட்டாசி,தமிழ்தொடர்ஆண்டு-5120: பிளிப்கார்ட் நிறுவனம் பல்வேறு சாதனங்களுக்கு அதிரடி விலைகுறைப்பை அறிவித்துள்ளது. மேலும் தேர்வு செய்யப்பட்ட வங்கி அட்டைகளைக் கொண்டு பிளிப்கார்ட் சிறப்பு விற்பனை சலுகை மூலம் பொருட்களை வாங்கும் வாடிக்கையாளர்களுக்கு சில நம்பமுடியாத விலைகுறைப்பும் அறிவிக்கப்பட்டுள்ளது. இந்தச் சிறப்புச் சலுகை விற்பனை புதன் கிழமையன்று தொடங்குகிறது. பல மின்சாதனங்களை மிகவும் குறைவான விலையில் வாங்க முடியும். முன்னனி நிறுவனங்களின் மிடுக்குப்பேசிகளுக்கும் விலை குறைப்பு அறிவிக்கப்பட்டுள்ளது. ரியல்மி சி1, மிடுக்குப்பேசியின் முந்தைய விலை ரூ.8,990-ஆக இருந்தது, பிளிப்கார்ட் சிறப்புச் சலுகை விற்பனை மூலம் விலைகுறைக்கப்பட்டு ரூ.6,999-க்கு விற்பனை செய்யப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. -தமிழர்க்குத் தொடர்ஆண்டு மட்டுமல்ல தொடர் நாள் கணக்கும் உண்டு. இன்று தமிழ்தொடர்நாள் எண்: 18,69,934.
இன்பினிக்ஸ் ஸ்மார்ட்2, மிடுக்குப் பேசியின் முந்தைய விலை ரூ.6,999-ஆக இருந்தது, பிளிப்கார்ட் சிறப்புச்சலுகை விற்பனை மூலம் விலைகுறைக்கப்பட்டு ரூ.4,999-க்கு விற்பனை செய்யப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இன்பினிக்ஸ் நோட் 5, மிடுக்குப் பேசியின் விலைகுறைக்கப்பட்டு ரூ.8,999-க்கு விற்பனை செய்யப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
பானாசோனிக் பி91, மிடுக்குப் பேசியின்; முந்தைய விலை ரூ.7,990-ஆக இருந்தது, சிறப்புச்சலுகை விற்பனை மூலம் ரூ.2,999 விலைகுறைக்கப்பட்டு விற்பனை செய்யப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
சாம்சங் கேலக்ஸி ஜே3 ப்ரோ, முந்தைய விலை ரூ.7,490-ஆக இருந்தது, தற்சமயம் பிளிப்கார்ட் சிறப்புச்சலுகை விற்பனை மூலம் விலைகுறைக்கப்பட்டு ரூ.6,190-க்கு விற்பனை செய்யப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
ஹானர் 7எஸ், மிடுக்குப் பேசியின்; முந்தைய விலை ரூ.9,999-ஆக இருந்தது, பிளிப்கார்ட் சிறப்புச்சலுகை விற்பனை மூலம் விலைகுறைக்கப்பட்டு ரூ.6,499-க்கு விற்பனை செய்யப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஒப்போ ஏ71, மிடுக்குப் பேசியின்; முந்தைய விலை ரூ.10,990-ஆக இருந்தது, பிளிப்கார்ட் சிறப்புச்சலுகை விற்பனை மூலம் விலைகுறைக்கப்பட்டு ரூ.6,990-க்கு விற்பனை செய்யப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.