22,புரட்டாசி,தமிழ்தொடர்ஆண்டு-5120: இன்னும் பத்திலிருந்து பனிரெண்டு ஆண்டுகளில், உலகம் மிகப்பெரிய இயற்கை பேரழிவை சந்திக்க வாய்ப்புள்ளதாக ஐநா அமைப்பு தெரிவித்துள்ளது. ஐநாவின் 'காலநிலை மாற்றத்தின் மீது அரசு சாரா குழு' அமைப்பு நேற்று இரவு அறிக்கை ஒன்றை வெளியிட்டது. 400 பக்கம் உள்ள அந்த அறிக்கை, மனித குலத்திற்கே மிகப்பெரிய எச்சரிக்கை விடுக்க கூடியது. மனிதர்கள் தற்போது இருக்கும் வாழ்க்கை முறையைக் கடைபிடித்தால், இன்னும் பனிரெண்டு ஆண்டுகளில் கண்டிப்பாக உலகம் நீரில் மூழ்கிவிடும் என்று எச்சரிக்கை விடுத்து இருக்கிறது. பூமியின் வெப்பநிலை வெகுவேகமாக உயரும் என்றும் கூறியுள்ளது. கடந்த 10 ஆண்டுகளில் பூமியின் வெப்பநிலை வேகமாக உயர்ந்துள்ளது. சரியாக 1 டிகிரி செல்ஸியஸ் வெப்பநிலை உயர்ந்து இருக்கிறது. இது இப்போதே உலகில் பல பனிப்பாறைகளைக் கரைத்துவிட்டது. இந்த நிலையில் இந்த வெப்பநிலை உயரும் வேகம் இன்னும் அதிகம் ஆகும். இது பெரிய பேரழிவிற்கு கொண்டு செல்லும் என்று அந்த அறிக்கையில் கூறப்பட்டு இருக்கிறது. அதன்படி பனிரெண்டு ஆண்டுகளில் பூமியின் வெப்பநிலை 3.5 டிகிரி செல்ஸியஸ் வரை அதிகரிக்கும் என்று ஐநா கூறியுள்ளது. ஆம், 3.5 செல்ஸியஸ் என்பது உலகையே அழிக்க கூடிய அளவு வெப்பநிலை ஆகும். இது கண்டிப்பாக பனிரெண்டு ஆண்டுகளுக்குள் நடந்து விடும். அதை தாண்டி போகாது அதற்குள், இந்த மோசமான அசம்பாவிதம் நடக்கும் என்று கூறப்பட்டுள்ளது. எதனால் இப்படி: தற்போது நாம் பயன்படுத்தும் கார், பைக் வெளியிடும் புகைகள்தான் இதற்கு காரணம் என்று கூறப்பட்டுள்ளது. ஆண்டுகள் செல்லச் செல்ல பத்து பனிரெண்டு ஆண்டுகளில், வாகனங்களின் எண்ணிக்கை அப்படியே இரு மடங்கு ஆகும். இதன் காரணமாக புகையின் அளவும் அதிகம் ஆகும் என்று கணிக்கப்பட்டு இருக்கிறது. அதேபோல் தொழிற்சாலை புகைகள் மூன்று மடங்காக உயரும் என்றும் கூறப்பட்டு உள்ளது. -தமிழர்க்குத் தொடர்ஆண்டு மட்டுமல்ல தொடர் நாள் கணக்கும் உண்டு. இன்று தமிழ்தொடர்நாள் எண்: 18,69,934.
இதே வேகத்தில் வெப்பநிலை உயர்ந்தால், உலகில் உள்ள பனிப்பாறைகள் எல்லாம் அப்படியே மொத்தமாக உருகிவிடும். இதனால் உலகில் 8லிருந்து 10 விழுக்காடு மட்டுமே நிலம் இருக்கும். மற்ற பகுதிகள் அனைத்தும் கடலுக்குள் சென்றுவிடும் என்று ஐநா எச்சரிக்கை விடுத்து இருக்கிறது. இதனால் அரசுகள் உடனடியாக களத்தில் இறங்கி செயல்பட வேண்டும் என்று கோரிக்கை வைத்துள்ளது.
மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.