Show all

சென்னையில் விமானச்சேவை ரத்து! கடன் சுமை, நிதி நெருக்கடியில் இருக்கும் ஜெட் ஏர்வேஸ்

நிதி நெருக்கடி காரணமாக சென்னையில் இருந்து இயக்கப்பட்ட ஜெட் ஏர்வேஸ் விமானங்கள் ரத்து செய்வதாக அறிவிக்கப்பட்டு உள்ளது.

29,பங்குனி,தமிழ்தொடர்ஆண்டு-5120: சென்னையில் இருந்து நள்ளிரவு 1.15 மணிக்கு பாரீஸ், காலை 11.25 மணி, மாலை 4.50 மணிக்கு மும்பைக்கும் என 3 விமானங்களை ஜெட் ஏர்வேஸ் நிறுவனம் இயக்கி வந்தது.  கடன் சுமை, நிதி நெருக்கடி காரணமாக இந்தியா முழுவதும் ஜெட் ஏர்வேஸ் நிறுவன விமான சேவை பெரும் அளவில் பாதிக்கப்பட்டு உள்ளது.

இந்தநிலையில் அந்த நிறுவன விமானங்களுக்கு எரிபொருள் வழங்குவதை எண்ணெய் நிறுவனங்கள் நிறுத்திவிட்டன. இதையடுத்து சென்னையில் இருந்து இயக்கப்பட்ட 3 விமானங்களையும் மறுஅறிவிப்பு வரும்வரை ரத்து செய்வதாக அறிவிக்கப்பட்டு உள்ளது. இதுபற்றி முன்கூட்டியே பயணிகளுக்கு தகவல் தரப்பட்டு, மாற்று ஏற்பாடுகள் செய்யப்பட்டதாகவும் அதிகாரிகள் தெரிவித்தனர். 

ஜெட் ஏர்வேஸ் இந்தியாவில் மும்பையைத் தலைமையகமாகக் கொண்டுள்ள ஒரு விமானப் போக்குவரத்து நிறுவனமாகும். இது இந்தியாவிலேயே ஏர் இந்தியாவிற்கு அடுத்தபடியான பெரும் விமான நிறுவனம் மற்றும் உள்ளூர் விமானப் போக்குவரத்துச் சந்தையில் முன்னணி வகிக்கிறது. இது உலகெங்கும் 68 பயண இலக்குகளுக்காக தினந்தோறும் 400 விமான ஊர்திகளை இயக்குகிறது.

சிங்கப்பூர் ஏர்லைன்ஸ் நிறுவனத்திற்கு அடுத்தபடியாக உலகின் மிகச் சிறந்த நீண்ட தூர இழுவை என்று சொல்லும் பெருமைக்குரியது. ஜெட்லைட் (முன்னர் ஏர் சஹாரா என்றழைக்கப்பட்டது) மற்றும் ஜெட் ஏர்வேஸ் கனெக்ட் என்ற இரண்டு குறைந்த விலை விமான சேவைகளையும் ஜெட் ஏர்வேஸ் இயக்குகிறது.

-தமிழர்க்குத் தொடர்ஆண்டு மட்டுமல்ல தொடர் நாள் கணக்கும் உண்டு. இன்று தமிழ்த் தொடர்நாள் எண்:18,70,120. 

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.