Show all

இந்தியத் தொழில் நுட்பக்கழகம் சென்னை முதலிடம்! இந்திய அளவில் சிறந்த கல்வி நிறுவனங்கள் தரவரிசையில்

இந்தியாவில் சிறந்த கல்வி நிறுவனங்கள் பட்டியலில் தொடர்ந்து இரண்டாவது ஆண்டாக இந்தியத் தொழில் நுட்பக்கழகம் சென்னை முதலிடம் பிடித்துள்ளது.

30,வைகாசி,தமிழ்தொடர்ஆண்டு-5122: பொறியியல் கல்வி நிறுவனங்களின் தர வரிசை பட்டியலை, நடுவண் அரசின், தேசிய தரவரிசை பட்டியல் நிறுவனம் தயாரித்துள்ளது. ஆண்டுதோறும் இந்தப் பட்டியல், கற்றல், கற்பித்தல், உட்கட்டமைப்பு வசதி, ஆராய்ச்சி, பட்டதாரிகளின் நிலை உள்ளிட்ட அம்சங்களின் அடிப்படையில் வெளியிடப்பட்டு வருகிறது. இந்தபட்டியலின் அடிப்படையில் கல்வி நிறுவனங்களின் தரம் நிர்ணயிக்கப்படும். இந்தப் பட்டியலை நடுவண் மனித வளத்துறை அமைச்சர் ரமேஷ் பொக்ரியால் வெளியிட்டார்.

இந்தப் பட்டியலில் இந்த ஆண்டும் நமது, இந்தியத் தொழில் நுட்பக்கழகம் சென்னையே முதலிடம் பெற்றுள்ளது.

இந்த பட்டியலில் இடம்பெற்ற முதல்பத்து கல்வி நிறுவனங்கள்
1. இந்தியத் தொழில் நுட்பக்கழகம் சென்னை 
2. இந்திய இயல்அறிவுக் கழகம் பெங்களூரு
3. இந்தியத் தொழில் நுட்பக்கழகம் டில்லி
4. இந்தியத் தொழில் நுட்பக்கழகம் மும்பை
5. இந்தியத் தொழில் நுட்பக்கழகம் காரக்பூர்
6. இந்தியத் தொழில் நுட்பக்கழகம் கான்பூர்
7. இந்தியத் தொழில் நுட்பக்கழகம் கவுகாத்தி
8. டில்லி ஜவகர்லால் நேரு பல்கலைக்கழகம்
9. இந்தியத் தொழில் நுட்பக்கழகம் ரூர்கீ 
10. பனாரஸ் ஹிந்து பல்கலைக்கழகம்.

நாம்தாம் இந்தியாவில் முதல் என்று நடுவண் அரசு அறிவித்துவிட்டு, நம்மிடம் பாடம் கேட்க முயலாமல், நீட் போன்ற தேர்வுகளை முன்னெடுத்து, நமக்குப் பாடம் கற்பிக்க முனைவதுதான் நடுவண் பாஜக அரசு. 

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.