மீண்டும் ஊரடங்கு கடுமையாக்கப்படும் என்பது தவறான செய்தி. தமிழக அரசு அப்படி எந்த அறிவிப்பையும் வெளியிடவில்லை. வதந்தி பரப்பியவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும். என்று முதல்வர் பழனிசாமி தெரிவித்துள்ளார்கள். 30,வைகாசி,தமிழ்தொடர்ஆண்டு-5122: மேட்டூர் அணையிலிருந்து கழிமுகப் பாசன குறுவை சாகுபடிக்காக ஆண்டுதோறும் இன்றைய நாளில் நீர் திறக்கப்படுவது வழக்கம். அதன் படி முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தண்ணீர் திறந்து வைத்தார். மேட்டூர் அணை நீர் திறப்பு விழாவில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி பேசும் போது கூறியதாவது:- அர்ப்பணிப்பு உணர்வுடன் மருத்துவர்கள் கொரோனாவிற்குச் சிகிச்சை அளித்து வருகிறார்கள். கொரோனா தொற்றின் வீரியத்தை மக்கள் இன்னும் புரிந்துகொள்ளவில்லை. பெரும்பாலான மக்கள் முகக்கவசம் அணிவதில்லை. தேவையில்லாமல் வெளியே சுற்றாதீர்கள். அரசுக்கு தயவுசெய்து ஒத்துழைப்பு வழங்குங்கள் என்று வேண்டுகோள் விடுத்தார். மீண்டும் ஊரடங்கு கடுமையாக்கப்படும் என்பது தவறான செய்தி. தமிழக அரசு அப்படி எந்த அறிவிப்பையும் வெளியிடவில்லை. வதந்தி பரப்பியவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும். கொரோனா நுண்ணுயிரி கட்டுப்படுத்தப்பட்ட பிறகே பள்ளிகள் திறக்கப்படும் என்று தெரிவித்துப் பேசினார்.
மேட்டூர் அணையின் நீர் திறப்பால் 5 லட்சத்து 22 ஆயிரத்து 400 ஏக்கர் நிலம் பாசன வசதி பெறும். குறுவை சாகுபடிக்கு 90 நாட்கள் தண்ணீர் திறந்து விடப்படும் என்று தெரிவித்தார்.
மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.



