ஊரடங்கை திரும்பப் பெற்றதன் பிறகும் மக்கள் கூட்டத்தில் இருந்து விலகி இருத்தலைத் தவறாமல் பின்பற்ற வேண்டும். மக்கள் தேவையின்றி வெளியில் நடமாடுவதை தவிர்க்க வேண்டும். மக்களின் ஒத்துழைப்பு இருந்தால் மட்டுமே கொரோனாவுக்கு எதிரான போரில் வெற்றி பெற முடியும். நமது ஆரோக்கியம் நமது கையில் உள்ளது. மக்களின் உடல் ஆரோக்கியத்தை காப்பாற்றும் சமூக பொறுப்பை நிர்வகிக்க சபதம் ஏற்போம். இவ்வாறு எடியூரப்பா தெரிவித்து உள்ளார். 24,பங்குனி,தமிழ்தொடர்ஆண்டு-5121: நடுவண் அரசின் உத்தரவின் பேரில் நாம் முன்னெடுத்த ஊரடங்கில்:- எப்போதும் பாதுகாப்பாக இருப்பவர்கள் பாதுகாப்பாகவே இருந்தார்கள். அவர்களிடம் இந்த ஊரடங்கால் புதியதாக எதுவும் மாற்றம் கொணர முடியவில்லை. எப்போதும் பாதுகாப்பாக இல்லாத அடங்காமாரிகள் தெருவில் திருக்குறள் சொன்னார்கள், குதித்து குதித்து முயல்மாதிரி தாவினார்கள், கொரோனா உறுதி மொழி எடுத்துக் கொண்டார்கள். சிலர் அடியும் கூட பட்டார்கள். சமூக ஆர்வலர்கள், மருத்துவர்கள், நலங்கு பணியாளர்கள், காவல்துறையினர் முடிந்த வரை முகக் கவசம் எல்லாம் அணிந்து பாதுகாப்பாக சமூகப்பணியாற்றினார்கள். கொரோனாவின் ஊடகங்களான அயலகத்தினர், அயலகம் சென்று மீண்டவர்கள் ஒளிந்து ஒளிந்து தங்கள் கொரோனா பரப்புதல் கடமையை செவ்வனே செய்தார்கள். பொதுவாக மக்கள் வீடடங்கி இருந்தார்கள். கர்நாடகத்தில் ஊரடங்கு உத்தரவு படிப்படியாக திரும்பப் பெறப்படும் என்று முதல் அமைச்சர் எடியூரப்பா தெரிவித்தார். தலைமைஅமைச்சர் மோடியின் அகல் விளக்கை ஏற்றும் உத்தரவைச் செயலாற்றிய பிறகு. முதல் அமைச்சர் எடியூரப்பா ஒரு அறிக்கை வெளியிட்டுள்ளார். அதில் அவர் கூறியிருப்பதாவது:- உலகம் முழுவதும் கொரோனா தொற்று வேகமாக பரவி வருகிறது. இதனால் ஏற்பட்டு வரும் சேதங்கள் அனைவருக்கும் தெரிந்ததே. மக்களின் உயிரை காக்க வேண்டும் என்ற நோக்கத்தில் தலைமைஅமைச்சர் மோடி வருகிற 14 அன்று வரை ஊரடங்கு உத்தரவை அமல்படுத்தி உள்ளார். கர்நாடகத்தில் குறிப்பாக பீதர், மைசூரு, மங்களூரு, பெங்களூரு, கலபுரகி ஆகிய இடங்களில் கொரோனா பாதிப்பு அதிகரித்து வருகிறது. இந்தத் தொற்றைக் கட்டுப்படுத்த அண்டை மாநிலங்களை இணைக்கும் எல்லைகளை மூடுவது, மக்கள் அதிகம் கூடும் இடங்களில் தடை விதிப்பது, ஆன்மிக தலங்களில் மக்கள் கூடுவதை தடுப்பது போன்ற நடவடிக்கைகளை மாநில அரசு எடுத்துள்ளது. ஊரடங்கு உத்தரவின் நோக்கம் என்ன என்பதை மக்கள் புரிந்துகொள்ள வேண்டும். இதை மீறினால் நாட்டுக்கு ஆபத்து ஏற்படும். எனவே, இதை உணர்ந்து மக்கள் நடந்துகொள்ள வேண்டும். வளர்ந்த நாடுகளில் இந்தக் கொரோனா மிக வேகமாக பரவி, பெரும் பாதிப்புகளை ஏற்படுத்தி வருகிறது. அதை கட்டுப்படுத்த முடியாமல் அந்த நாடுகள் திணறி வருகின்றன. ஊரடங்கு உத்தரவு வருகிற 14 அன்று நிறைவடைகிறது. இதை மேலும் நீட்டிக்க வேண்டுமா? என்பது குறித்து ஆலோசித்து முடிவு எடுக்கப்படும். இதுகுறித்து பொதுமக்கள் மற்றும் அமைப்புகள் அரசுக்கு ஆலோசனைகள் வழங்கலாம். ஊரடங்கை திரும்பப் பெற்றதன் பிறகும் மக்கள் கூட்டத்தில் இருந்து விலகி இருத்தலைத் தவறாமல் பின்பற்ற வேண்டும். மக்கள் தேவையின்றி வெளியில் நடமாடுவதை தவிர்க்க வேண்டும். மக்களின் ஒத்துழைப்பு இருந்தால் மட்டுமே கொரோனாவுக்கு எதிரான போரில் வெற்றி பெற முடியும். நமது ஆரோக்கியம் நமது கையில் உள்ளது. மக்களின் உடல் ஆரோக்கியத்தை காப்பாற்றும் சமூக பொறுப்பை நிர்வகிக்க சபதம் ஏற்போம். இவ்வாறு எடியூரப்பா தெரிவித்து உள்ளார்.
மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.