கொரோனா பரவலைத் தடுக்க, கொரோனாவை முழுமையாக அப்புறப்படுத்த- சோதனைகள், மருந்துகள் தேடல், சுயபாதுகாப்பு நடவடிக்கைகளே தேவை. வினையே ஆடவர்க்கு உயிரே! வினை முடக்கி முடங்கியிருப்பது நம்மைப் பிணமாக்கிக் கொள்வதேயாகும். 24,பங்குனி,தமிழ்தொடர்ஆண்டு-5121: அமெரிக்காவில் நியூயார்க்கில் பெண் புலி ஒன்றுக்கு கொரோனா நுண்ணுயிரித் தாக்குதல் ஏற்பட்டுள்ளது பெரிய பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. கொரோனா காரணமாக அமெரிக்காவில் 3,36,550 பேர் பாதிக்கப்பட்டு உள்ளனர். அமெரிக்காவில் 9,610 பேர் பலியாகி உள்ளனர். நேற்று அமெரிக்காவில் புதிதாக 25,000 பேருக்கு கொரோனா தாக்கியுள்ளது. அமெரிக்காவில் கொரோனா தொற்று இப்படி வேகமாக பரவி வரும் நிலையில் அங்கு பெண் புலி ஒன்றுக்கு கொரோனா நுண்ணுயிரித் தாக்குதல் ஏற்பட்டுள்ளது பெரிய பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. பிரான்க்ஸ் விலங்குகள் சரணாலயத்தில் உள்ள நாடியா என்ற புலிக்கு கொரோனா தாக்குதல் ஏற்பட்டுள்ளது. இன்று நடத்தப்பட்ட சோதனையில் அந்த புலிக்கு கொரோனா பாதிப்பு இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. உலகிலேயே புலி ஒன்றுக்கு கொரோனா தொற்று இருப்பதை முதல் முறையாகக் கண்டறியப் பட்டுள்ளது. இந்த புலிக்கு 4 அகவை ஆகிறது. மலையான் வகை புலி ஆகும் இது. கடந்த சில நாட்களாக கடுமையாக இருமி வந்த இந்த புலிக்கு இரத்த பரிசோதனை செய்யப்பட்டது. அந்த புலிக்கு மோசமான சுவாச நோயும் இருந்தது. இந்த பரிசோதனையின் முடிவில் அதற்கு கொரோனா இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. தற்போது அதே சரணாலயத்தில் இன்னும் 5 புலிகளுக்கு கொரோனா அறிகுறி உள்ளது. இந்தப் புலிகளுக்கு விரைவில் சோதனை செய்யப்படும். ஆனால் சரணாலயத்தில் இருக்கும் வேறு விலங்குகளுக்கு கொரோனா அறிகுறி இதுவரை இல்லை. தற்போது விலங்குகளுக்கான மருத்துவமனையில் வைத்து இந்த புலிக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. அந்த சரணாலயத்தில் பணியாற்றிய நபர் ஒருவருக்கு கொரோனா ஏற்பட்டுள்ளது. கொரோனா அறிகுறி இல்லாமலே அவருக்கு கொரோனா ஏற்பட்டு இருக்கிறது. அவர்கள் மூலம் இந்த புலிக்கு கொரோனா தொற்று பரவி இருக்கலாம் என்று கூறுகிறார்கள். இந்த சரணாலயம் கடந்த மார்ச் 16ல்தான் மக்கள் பயன்பாட்டிற்கு விடப்படாமல் மூடப்பட்டுவிட்டது இப்போதைக்கு உலகம் முழுவதும் கொரோனா பரவலுக்கு எதிராக முடங்கல் நடவடிக்கையையே தீர்வாக எடுத்துக் கொண்டுள்ளது. இது போன்ற நிகழ்வுகள் அந்த நடவடிக்கை வெட்டியான நடவடிக்கை என்றே அடையாளம் காட்டுகின்றன. இதுவரை உலகில் எந்த நோயுக்கும் இதுபோன்ற முடங்கல் நடவடிக்கையை உலகம் முன்னெடுக்க வில்லை. ஆனால் இந்த நோயை உலகிற்கு அடையாளம் காட்;டிய சீனா வுகான் நகரை முடக்கி இந்த நடவடிக்கையை நமக்கு கற்றுத் தந்தது. நாம் அப்படியே பின்பற்றி வருகிறோம். இதுவரை அம்மை, போலியோ, டெங்கு, எய்ட்ஸ் இப்படி பலபல நோய்களுக்கு உலகம் இப்படி ஓடி ஒளியவில்லை. ஒளிதல் தான் தீர்வு என்றால் எப்போதும் வெளியே வரவே முடியாது. கைத்தட்டியும், மணிஅடித்தும், விளக்கணைத்தேற்றியும் கொரோனாவை எதிர் கொள்ள முடியும் என்கிற முடவாண்டிகளை நாம் ஆட்சியாளர்களாக ஏற்றிருக்கிறோம். நிர்வாண நாட்டில் கோமணம் கட்டியவன் பைத்தியக்காரன் என்ற அச்சத்தோடு நாமும் பட்டாசு வெடிக்கிறோம். கொரோனா பரவலைத் தடுக்க, கொரோனாவை முழுமையாக அப்புறப்படுத்த- சோதனைகள், மருந்துகள் தேடல், சுயபாதுகாப்பு நடவடிக்கைகளே தேவை. வினையே ஆடவர்க்கு உயிரே! வினை முடக்கி முடங்கியிருப்பது நம்மைப் பிணமாக்கிக் கொள்வதேயாகும்.
மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.