Show all

சிரிப்பாய் சிரிக்கும் இணையம்! நிதிஅமைச்சர் நிர்மலா சீதாராமன் அறியாமை குறித்து: பொருளாதாரம் மற்றும் நாட்டுநடப்பில்

நிர்மலா சீதாராமன் கொடுத்த ஒரு பேட்டியால்: பொருளாதாரம் மற்றும் நாட்டுநடப்பில் அவருக்குள்ள அறியாமை வெட்ட வெளிச்சம் ஆகிய நிலையில், இணைய ஆர்வலர்கள், நிதிஅமைச்சர் நிர்மலா சீதாராமன் அறியாமை குறித்து கருத்துப் படங்கள் வெளியிட்டு சிரிப்பூட்டி வருகின்றனர்.

24,ஆவணி,தமிழ்தொடர்ஆண்டு-5121: ஊர்தி உற்பத்தித் துறை சரிவு குறித்து பக்கம் பக்கமாக, கடந்த ஒரு மாதத்திற்கு மேலாக துறை சார்ந்த வல்லுனர்கள் அக்கு வேறு ஆணி வேறாக அலசி, இந்தியாவின் ஆளும் பெறுப்பு கிடைத்திருக்கும் பாஜக அரசு, துறை சார்ந்த வல்லுனர்கள் கருத்துக்களுக்கு செவிமடுத்து செயலாற்றத் தொடங்கினால், ஊர்தி உற்பத்தித் துறை சரிவு நேர்படும் என்று தெரிவித்து வரும் நிலையில், இந்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் கொடுத்த விளக்கம் இணையத்தில் பெரும் நகைச்சுவையாக உலா வந்து கொண்டிருக்கிறது.

இணையம் முழுக்க பலர் நிர்மலா சீதாராமனுக்கு எதிராக கீச்சு பதிவிட்டும் கருத்துப் படங்கள் வெளியிட்டும்  வருகிறார்கள். ஊர்தி உற்பத்தித் துறையில் சரிவு ஏற்பட்டது ஏனென்று இந்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் அண்மையில் விளக்கம் அளித்தார். அவரின் பேட்டி பெரிய சர்ச்சை ஆகியுள்ளது. 

நிர்மலா சீதாராமன் கூறியதாவது:- “தற்போதைய இளைஞர்கள் மற்றும் மக்கள் நடுவே ஊர்திகள் வாங்கும் ஆசை குறைந்துள்ளது . பொதுவாக இளைஞர்கள் இப்போது தவணை கட்ட விரும்புவதில்லை. அதற்கு பதிலாக அவர்கள் ஓலா, உபரில் செல்ல விருப்பம் தெரிவித்துள்ளனர். அதேபோல் பலர் தற்போது மெட்ரோவை அதிகமாக பயன்படுத்துகிறார்கள். இதனால் ஊர்திகள் வாங்குவது குறைந்துள்ளது. இதுதான் ஊர்தி உற்பத்தித் துறை சரிவிற்கு காரணம்” என்று இவர் கூறியுள்ளார். 

இந்த நிலையில் நிர்மலா சீதாராமனின் கருத்திற்கு இணைய ஆர்வலர்கள் பதிலடி கொடுக்க தொடங்கி உள்ளனர். என்ன நிர்மலா சீதாராமன் இப்படி எல்லாம் பேசுகிறார். அவருக்கு பொருளாதரம் குறித்து தெரியுமா, என்று கேள்வி கேட்டு கலாய்க்க தொடங்கி இருக்கிறார்கள். 

“மக்களே பொருளாதாரம் ஏன் கீழே போகுது தெரியுமா? பண மதிப்பு ஏன் கீழ போகுது தெரியுமா?... புவி ஈர்ப்பு விசையால்தான்” என்று ஒருவர் கிண்டலடித்துள்ளார்.

ஓலா, “உபர் மூலம் உருவாகும் வேலை வாய்ப்பை வைத்து வேலைவாய்ப்பை உருவாக்கிவிட்டோம் என்று கணக்கு காட்டுவீர்கள். தற்போது அதே ஓலா, உபரை ஊர்தி உற்பத்தித்துறை சரிவிற்கு காரணமாக கூறுவீர்களா?” என்று ஒரு பதிவு. 

“நல்லவேளை நேரு இல்லை. அதனால் இந்த பிரச்சனைக்கு இவர்கள் நேருவை காரணமாக சொல்லவில்லை, என்று ஒருவர் கூறியுள்ளார்.

-தமிழர்க்குத் தொடர்ஆண்டு மட்டுமல்ல, தொடர் நாள் கணக்கும் உண்டு. இன்று தமிழ்த் தொடர்நாள் எண்:18,70,271.

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.