Show all

அச்சுறுத்தும் கொரோனா! முதன்மை அமர்வு மட்டுமே செயல்படும்: உச்சஅறங்கூற்றுமன்ற நிர்வாகம் அறிவிப்பு

கொரோனா முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக உச்சஅறங்கூற்றுமன்றத்தில் முதன்மையமான வழக்குகளை விசாரிக்கும் அமர்வு மட்டுமே செயல்படும் என  உச்சஅறங்கூற்றுமன்ற நிர்வாகம் அறிவித்துள்ளது. 

01,பங்குனி,தமிழ்தொடர்ஆண்டு-5121: உலகம் முழுவதும் வேகமாக பரவி வரும், சீனாவில் இருந்து பரவத் தொடங்கிய கொரோனா பாதிப்பால், இதுவரை 5,080 பேர் உயிரிழந்தனர். உலகளவில் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிகையும் 1,37,702 ஆக அதிகரித்துள்ளது. உலகையே அச்சுறுத்தி வரும் கொரோனா வைரஸ் இதுவரை 127 நாடுகளுக்கு பரவி உள்ளது.

இந்தியாவில் 81 பேருக்கு கொரோனா உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.  64 இந்தியர்கள், 16 இத்தாலியர்கள், கனடாவைச் சேர்ந்த ஒருவரும் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளதாக இந்திய நலங்குத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.

இந்நிலையில் கொரோனா முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக உச்சஅறங்கூற்றுமன்றத்தில் முதன்மையான வழக்குகளை விசாரிக்கும் அமர்வு மட்டுமே செயல்படும் என  உச்சஅறங்கூற்றுமன்ற நிர்வாகம் அறிவித்துள்ளது. 

அதிக கூட்டம் சேர வேண்டாம் என்ற இந்திய நலங்குத்துறையின் அறிவுரையின்படி நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.  வழக்கறிஞர்களைத் தவிர வேறு எந்த நபர்களும் அறங்கூற்றுமன்ற அறையில் அனுமதிக்கப்பட மாட்டார்கள்.

கொலை கொள்ளை என்று கடுமையான குற்றவாளிகளுக்கு கூட தண்டனைத் தீர்ப்பு வழங்கும் ஆற்றல் மிக்க அறங்கூற்றுமன்றத்தையே அதிர்வுக்குள்ளாக்கியுள்ள வல்லமை படைத்ததாகிவிட்டது கொரோனா.

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.