Show all

அப்பாவின் ஓட்டுநர் உரிமம் ரத்து! தன் 5அகவை பெண் குழந்தையை ஓட்டுநராக்கி பயணித்தார்

16,ஆடி,தமிழ்தொடர்ஆண்டு-5120: கொச்சியில் பெரும்படப்பையை சேர்ந்தவர் ஷிபு பிரான்சிஸ். இவர் நேற்று தனது 5 அகவை பெண் குழந்தையை பைக்கில் முன்பகுதியில் நிற்க வைத்து கொண்டார்.

அந்தக் குழந்தைக்கு பின்னர் இன்னொரு குழந்தை, அதன் பின்னர் பிரான்சிஸ், அவரது மனைவி என இரு சக்கர வாகனத்தில் எங்கோ சென்று கொண்டிருந்தனர். அப்போது அவ்வழியாக கார் ஓட்டி வந்த ஒருவர் இவர்களை பார்த்து அதிர்ச்சி அடைந்தார்.

காரணம் பைக்கை ஓட்டியது பிரான்சிஸ் அல்ல, அவரது 5 அகவை மகள். இதனால் அவர் உடனடியாக தனது செல்பேசியில் இதை காணொளி எடுத்து சமூகவலைதளங்களில் பரப்பினார்.

இதையடுத்து இந்தக் காணொளி மோட்டார் வாகன அலுவலக அதிகாரிகளின் கண்களுக்கும் சிக்கியது. அவர்கள் உடனடியாக சம்பந்தப்பட்ட பிரான்சிஸ்ஸை அழைத்து எச்சரித்ததோடு அவரது ஓட்டுநர் உரிமத்தையும் தற்காலிகமாக ரத்து செய்தனர்.

சாதனை முயற்சி தவறல்ல ; உரிய முறையில் அதை நிகழ்த்தலாம். பொது இடம் வேண்டாம்.

-தமிழர்க்குத் தொடர்ஆண்டு மட்டுமல்ல தொடர் நாள் கணக்கும் உண்டு. இன்று தமிழ்தொடர்நாள் எண்: 18,69,866.

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.