16,ஆடி,தமிழ்தொடர்ஆண்டு-5120: நடுவண் தகவல் மற்றும் ஒளிபரப்புத்துறை இணை அமைச்சர் ராஜ்யவர்த்தன் ரத்தோர் மாநிலங்கள் அவையில் அளித்த தகவலில்: மோடி தலைமையிலான பாஜக அரசு கடந்த 4 ஆண்டுகளில் விளம்பரத்துக்காக மட்டும் ரூ.4 ஆயிரத்து 880 கோடி செலவு செய்துள்ளது என்று தெரிவித்துள்ளது. ரூ.2,128.33 கோடி அச்சு விளம்பரத்துக்கும், காணொளி மற்றும் கேளொலி விளம்பரங்களுக்கு ரூ.2 ஆயிரத்து 131.57 கோடியும், சுவரொட்டிகள், விளம்பரப்பலகைகள், பதாகைகள் உள்ளிட்ட வகைகளில் விளம்பரம் செய்ததற்காக ரூ.620.70 கோடியும் செலவு செய்யப்பட்டுள்ளன. ஆனால் அதே சமயம் விளம்பர நிறுவனங்களான 236 தனியார் தொலைக்காட்சிகளுக்கு அங்கீகார அனுமதி மறுக்கப்பட்டது. கடந்த 3 ஆண்டுகளில் 147 தொலைக்காட்சிகளின் உரிமம் ரத்து செய்யப்பட்டுள்ளது இந்தத் தகவல்களை அமைச்சர் ரத்தோர் தெரிவித்தார். -தமிழர்க்குத் தொடர்ஆண்டு மட்டுமல்ல தொடர் நாள் கணக்கும் உண்டு. இன்று தமிழ்தொடர்நாள் எண்: 18,69,866.
மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.



