புது வகையான விளம்பரம். விளம்பரச் செலவை ஊடக நிறுவனங்களுக்குத் தருவதற்கு மாற்றாக, இப்படி முன்னெடுக்கின்றனர். திறப்பு விழாச் சலுகையாக ஓர் உணவகத்தில், ரூ. 10 விலையுள்ள ஒரு புரோட்டா ரூ. 1க்கும், ரூ.100 விலையுள்ள ஊண்புலவு ரூ.10-க்கும் விற்பனை செய்யப்படும் என்ற அறிவிப்பு வெளியானதை தொடர்ந்து அங்கு பொதுமக்கள் குவிந்தனர். காவல்துறை கட்டுப்படுத்தியது. 19,ஆடி,தமிழ்தொடர்ஆண்டு-5121: தேனி மாவட்டம் பெரியகுளத்தில் புதிதாக திறக்கப்பட்ட தனியார் உணவகத்தில் புரோட்டா முதல் ஊண்புலவு வரை அனைத்துப் பொருட்களுக்கும் அதிரடி விலை குறைப்பை அறிவித்தனர். ரூ. 10 விலையுள்ள ஒரு புரோட்டா ரூ. 1க்கும், ரூ.100 விலையுள்ள ஊண்புலவு ரூ.10-க்கும் விற்பனை செய்யப்படும் என்ற அறிவிப்பு வெளியானதை தொடர்ந்து அங்கு பொதுமக்கள் குவிந்தனர். கூட்டத்தை கட்டுப்படுத்துவதற்காக தடுப்புகள் அமைக்கப்பட்டிருந்தன. சிறுவர்கள், பெண்கள், ஆண்கள் மற்றும் முதியவர்கள் என ஏராளமானோர் வரிசையில் குவிந்தனர். அருகில் உள்ள ஊர்களிலிருந்தும் மக்கள் குவிய தொடங்கினர். இதையடுத்து காவல்துறையினர் அங்கு வந்து கூட்டத்தை ஒழுங்குபடுத்தினர். -தமிழர்க்குத் தொடர்ஆண்டு மட்டுமல்ல, தொடர் நாள் கணக்கும் உண்டு. இன்று தமிழ்த் தொடர்நாள் எண்:18,70,234.
மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.