வருமான வரித்துறையினர் அதிரடி சோதனை என்று, அடாவடியாக நெய்வேலியில் நடந்த ‘மாஸ்டர்’ படப்பிடிப்பு தளத்துக்கு சென்று விஜய்யை விசாரணைக்கு அழைத்து வந்தமைக்கு, இதற்கு விஜய் மக்கள் இயக்கம் கண்டனம் தெரிவித்துள்ளது. 24,தை,தமிழ்தொடர்ஆண்டு-5121: விஜய் நடித்த ‘பிகில்’ படத்தை தயாரித்த ஏ.ஜி.எஸ். பட நிறுவன அலுவலகங்கள் மற்றும் நிதிநிறுவனர் மதுரை அன்புச்செழியன் வீடு மற்றும் அலுவலகங்களில் வருமான வரித்துறையினர் அதிரடி சோதனை நடத்தினர். மேலும் நெய்வேலியில் நடந்த ‘மாஸ்டர்’ படப்பிடிப்பு தளத்துக்கு சென்று விஜய்யை விசாரணைக்கு வருமான வரித்துறையினர் அழைத்து வந்தனர். இதற்கு விஜய் மக்கள் இயக்கம் கண்டனம் தெரிவித்துள்ளது. இதுகுறித்து விஜய் மக்கள் இயக்க மாநில செயலாளர் ரவிராஜா வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:- விஜய் வாங்கிய பணத்துக்கு முறையாக வரி கட்டுகிறார். ஒன்றிய பாஜக அரசின் இந்த செயல் எங்களுக்கு அதிருப்தியை ஏற்படுத்தி உள்ளது. விஜய் மேற்கொண்டு வரும் சமூக நலப்பணிகள் அனைவருக்கும் தெரியும். 264 மாணவ-மாணவிகளின் படிப்பு செலவை முழுவதுமாக ஏற்று அவர்களை படிக்க வைத்து வருகிறார். தான் நடிக்கும் படங்களில் கூட நல்ல கருத்துகள் இருக்கும்படி பார்த்துக்கொள்கிறார். ‘தமிழன்’ படத்தில் தனிமனிதனுக்கு அடிப்படை சட்டம் தெரிய வேண்டும் என்றார். போக்கிரி, தெறி படங்களில் காவல்துறையின் நேர்மையை வெளிப்படுத்தினார். ‘துப்பாக்கி’ படத்தில் தேசபாதுகாப்பை முன்னிறுத்தினார். ‘கத்தி’ படத்தில் உழவர்களுக்காக குரல் கொடுத்தார். ‘மெர்சல்’ படத்தில் ஏழைகளுக்கு இலவச மருத்துவ உதவி கிடைக்க வலியுறுத்தினார். ‘பிகில்’ படத்தில் பெண்மையை போற்றினார். அப்படிப்பட்ட கலைஞனை அவரது காரில் கூட ஏற அனுமதிக்காமல் அழைத்து வந்த செயல் விஜய் ரசிகர்களுக்கு மன உளைச்சலை ஏற்படுத்தி உள்ளது. மாநிலம் முழுவதும் ரசிகர்கள் கொந்தளித்த வண்ணம் இருக்கிறார்கள். அவர்களிடம் பொறுமை காக்கும்படி கூறியுள்ளோம். இவ்வாறு அறிக்கையில் கூறியுள்ளார். எங்களிடம் விஜய்க்கு முன்பே, எம்ஜியார் அவர்கள் போல நல்லசெல்வாக்கு உண்டு. அந்த செல்வாக்கை வளர்ப்பதற்கே, நடுவண் பாஜக அரசின் இதுபோன்ற அடாவடிகள் பயன்படுமேயெழியா அவருக்கு நாங்கள் வழங்கும் செல்வாக்கு குறைவு படாது என்கின்றனர் தமிழக மக்கள்.
“விஜய்யிடம், வருமானவரித்துறையினர் மேற்கொண்ட விசாரணை நடவடிக்கைகள் கண்டிக்கத்தக்கது. பயங்கரவாதியை நடத்துவதுபோல் ‘மாஸ்டர்’ படப்பிடிப்பு தளத்துக்கு சென்று விஜய்யை அழைத்து வந்து விசாரிப்பது ஏன்? அவர் நித்யானந்தாவா? இல்லை நிரவ்மோடியா? இதுபோன்ற விசாரணை வேறு எந்த நடிகருக்காவது நடந்துள்ளதா?.
மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.



