Show all

கெத்து காட்டும் விஜய் இரசிகர்கள்! 2 நாள் 23 மணி நேர சோதனை ஒத்த ரூபா கூட காணப்படவில்லை.

நடிகர் விஜய் வீட்டில் 24 மணி நேரத்திற்கும் மேலாக நடைபெற்ற வருமான வரி சோதனை இரவு 8 மணி அளவில் முடிவடைந்து இருக்கிறது. ஆனாலும் ஒத்த ரூபா கூட கண்டுபிடிக்க முடியல. கெத்து காட்டுகிறார்கள் விஜய் இரசிகர்கள்.

24,தை,தமிழ்தொடர்ஆண்டு-5121: நடிகர் விஜய் வீட்டில் 24 மணி நேரத்திற்கும் மேலாக நடைபெற்ற வருமான வரி சோதனை இரவு 8 மணி அளவில் முடிவடைந்து இருக்கிறது.

சென்னையில் அமைந்துள்ள விஜய்யின் வீட்டில் வருமானவரி துறை  அதிகாரிகள் சோதனை நடத்தினர். அதன் தொடர்ச்சியாக நெய்வேலியில் மாஸ்டர் படப்பிடிப்பில் இருந்த விஜய்யிடம் வருமான வரி அதிகாரிகள் நேரிடையாக விசாரணை மேற்கொண்டனர். அவரை அங்கிருந்து அப்படியே காரில் சென்னை அழைத்து வந்தனர்.

பனையூரில் உள்ள விஜய்யின் மற்றொரு வீட்டில் அதிகாரிகள் 24 மணி நேரத்திற்கும் மேலாக விசாரணை மேற்கொண்டனர். மேலும், விஜயிடம் இது குறித்த வாக்குமூலம் பெறப்பட்டுள்ளதோடு அதிகாரிகள் அவரது மனைவி சங்கீதாவிடமும் வாக்குமூலம் பெற்றுள்ளதாக தெரிகிறது. 

இவ்வாறான நிலையில் விஜய்யிடம் இருந்து ஒத்த ரூபா கூட கண்டுபிடிக்க முடியவில்லையாம். மேலும் அவர்கள் தேடிவந்த எந்த ஆவணங்களும் காணப்படவில்லையாம். இதையடுத்து இரவு 8 மணி அளவில் தங்களது சோதனையை  முடித்துக் கொண்டனர். 2 நாட்களாக நடைபெற்ற இந்த சோதனை முடிவு பெற்றதாக வருமான வரித்துறை கூறி இருக்கிறது.

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.