உலகவங்கியில் கடன் வாங்குவதற்காக உலமயமாக்கலை ஒப்புக்கொண்ட நமக்கு, கடன் மட்டுமல்ல கொரோனாவையும் கொடுத்திருக்கிறது உலகம். கொரோனாவில் சிக்க வைத்த அரசியல்வாதிகளின் பொறுப்பின்மை சார்ந்த சுமையும், குடும்பத்தின் மீதே என்று உணர்த்துகிறது இந்த நிகழ்வு. 28,பங்குனி,தமிழ்தொடர்ஆண்டு-5121: குடும்ப அமைப்பு முறை தொடர்ந்து ஐயாயிரம் ஆண்டுகளாக வழிவழியாகப் பேணப்பட்டு வருவதால், அதில் பண்பாட்டு நெறிமுறைகளைக் காணமுடியும். ஆனால் தமிழகமும் இந்தியாவும் இன்றைக்கு சார்ந்திருக்கிற சட்ட சமுதாய அமைப்பு முறைகளோ பன்முகப் பட்ட அயல் இயல்களை உள்வாங்கியதாகும். பிள்ளைகளை வளர்த்து படிக்க வைத்து திருமணம் செய்விப்பது என்கிற பிள்ளைகளுக்கான கடமைகள் அனைத்தும் பெற்றோர்களைச் சார்ந்ததாகவே இருக்கிறது குடும்ப அமைப்புமுறையில். அவற்றுக்கான பொருளைப் பெற்றோர்கள் தொழில் மூலமாகவே ஈட்டுகின்றனர். எந்த அரசும் தொழில் செய்தே நாட்டையும் நிருவகிக்க முடியும். மக்களிடம் எளிமையாகப் பெறும் வரிகள் மூலம் நாட்டை நிருவகிக்கும் வாய்ப்பின் காரணமாகத்தான் எல்லோரும் ஆட்சிக்கு வர ஆசைப்படுகிறார்கள். அரசுக்கு சாராயக்கடை நடத்தும் வாய்ப்பும் இருப்பதால், எதற்கும் கையாலாகாதவர்களும் கூட போட்டியில் இணைந்து கொள்கிறார்கள். வரிகளைப் பெறுவதற்கான துறைகள் அனைத்தும் மறுஉற்பத்தி சாராத இழப்பு மட்டுமே என்கிற ஒருவழிப் பாதையாகி மக்களின் உழைப்பு ஏராளமாக வீணடிக்கப் படுகிறது. உழைக்கும் மக்களுக்கு வரி ஏய்பாளர்கள் என்று பட்டம். தண்டிப்பதற்கு அறங்கூற்றுமன்றங்கள். நடப்பில் நம்மைப் பிணைத்துக் கொண்டுள்ள இற்றைச் சமுதாய அமைப்புமுறை தொழில் செய்து வருமானம் ஈட்டிய போதும் தம்மக்களின் உழைப்பைச் சுரண்ட வரியும் விதித்து மிரட்டி ஊடகங்களில் விளம்பரம்செய்து கடுமையாக வசூலிக்கவும் செய்து அதையும் ஆளும்பாழும் வீணடிக்கிறது. உலக வங்கியில் கடனும் வாங்குகிறது. உலக வங்கியில் கடன்பெறுவதற்காக உலமயமாக்கல் என்கிற உலகக் கோட்பாட்டிற்கு தலைவணங்கி கையொப்பம் இட்டிருக்கிறது. அதன் விளைவு இன்று கொரோனா தாக்கம் வரை இந்தியாவை இட்டுச் சென்றிருக்கிறது. கொரோனா பரவலைத் தடுப்பதற்கு என்பதற்காக, கொரோனா நோயாளிகள் எங்கிருந்து வந்தார்கள் அவர்கள் எப்படிப் பரவுகிறார்கள் என்பதை ஒரு பக்கம் மாநில அரசுகள் முயன்று வந்தாலும், நடுவண் அரசு ஒட்டுமொத்தமாக ஊரடங்கை அறிவித்து விட்டது. மக்கள் என்ன செய்து கொண்டிருக்கிறார்கள்? அவர்கள் எப்படி நமக்கு வரியும் நமது சாராயக்கடைகளுக்கு வருமானமும் தருகிறார்கள்? இந்த திடீர் ஊரடங்கால் எப்படி என்னென்ன வகையாக பாதிப்பார்கள் என்ற ஆய்வு எதுவும் இல்லாமலே. இந்த நிலையில், ஐதராபாத்தில் தவித்த மகனை நிஜாம்பாத், போதானை சேர்ந்த பெண் ராஜியா 1,400 கி.மீ. ஸ்கூட்டியில் பயணித்து மீட்டுள்ளார் என்பது குடும்பத்தின் உறுதிப்பாட்டை நிறுவதாயிருக்கிறது. நாடு முழுவதும் ஏப். 14 வரை ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. நாட்டின் பல இடங்களில் மாட்டிக் கொண்ட பலர் தங்கள் சொந்த ஊருக்கு திரும்ப முடியாமல் மாட்டிக் கொண்டனர். இந்நிலையில் நிஜாம்பாத்தைச் சேர்ந்த நிஜாமுதீன் என்பவர் மருத்துவ பயிற்சிக்காக ஐதரபாத் வந்துள்ளார். ஊரடங்கு உத்தரவால் சொந்த ஊர் திரும்ப முடியாமல் போனதால். அவரது தாயார் ராஜியா போதான் காவல்துறை துணைக் கண்காணிப்பாளரிடம் அனுமதி கடிதம் வாங்கி தன் மகனை 1,400 கி.மீ. ஸ்கூட்டியில் பயணித்து பத்திரமாக மீட்டுள்ளார்.
மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.



