Show all

கொரோனா தந்த சோகம்! ஊரடங்கை மீறி வெளியில் நடமாடிய 1.35 லட்சம் பேர் கைது

தமிழகத்தில், ஊரடங்கை மீறி வெளியில் நடமாடிய 1,35,734 பேர் கைது செய்யப்பட்டு பிணையில் விடுதலை செய்யப்பட்டனர். அவர்கள் மீது, 1,25,708 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. 

28,பங்குனி,தமிழ்தொடர்ஆண்டு-5121: தமிழகத்தில், ஊரடங்கை மீறி வெளியில் நடமாடிய 1,35,734 பேர் கைது செய்யப்பட்டு பிணையில் விடுதலை செய்யப்பட்டனர்.

இது தொடர்பாக தமிழக அரசு வெளியிட்ட அறிக்கை:- கொரோனா நுண்ணுயிரி அச்சுறுத்தல் காரணமாக தமிழகத்தில் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. இந்த காலத்தில் தடையை மீறி வெளியில் நடமாடிய 1,35,734 பேர் கைது செய்யப்பட்டு பிணையில் விடுவிக்கப்பட்டனர். அவர்கள் மீது, 1,25,708 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. குற்றம் என்று தண்டிக்கப் படுவார்களா? கையறுநிலை என்று மன்னிக்கப்படுவார்களா? அறங்கூற்றுமன்ற தீர்ப்பில் தெரியவரும்

இந்த காலகட்டத்தில், 1,06,539 வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டு ரூ.45,13,544 அபராதம் வசூலிக்கப்பட்டுள்ளது. இவ்வாறு காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.