Show all

அன்றாடம் வங்கிகள் 4மணிநேரம் மட்டுமே செயல்படும்! இந்தியா முழுவதும், இன்;றிலிருந்து 18நாட்களுக்கு கொரோனா பரவல் தடுப்பு நடவடிக்கையாக

நகைக்கடன் வழங்கப்படமாட்டாது. பணம் எடுத்தல், பணம் கட்டுதல், காசோலை, அரசு தொடர்பான பணிகள், மற்ற வங்கிகளுக்கு பணம் கொடுத்தல் பணிகள் மட்டுமே நடக்கும். இன்;றிலிருந்து 18நாட்கள் 4மணிநேரம் மட்டுமே வங்கிகள் செயல்படும்.

10,பங்குனி,தமிழ்தொடர்ஆண்டு-5121: கொரோனா தாக்கத்தால் வங்கிகள் பல்வேறு புதிய விதிமுறைகளை பின்பற்றும்படி இந்திய வங்கிகள் சங்கம் பரிந்துரைத்துள்ளது. அதன்படி இன்றிலிருந்து 18நாட்கள் அன்றாடம் 4மணிநேரம் மட்டுமே செயல்படும். காலை 10:00 மணி முதல் பகல் 2:00 வரை மட்டும் செயல்படும். சில வங்கிகள் வாடிக்கையாளர்களுக்கு வசதிக்கு ஏற்ப காலை 11:00 மணி முதல் 3:00 மணி வரை செயல்படலாம்.

பணம் எடுத்தல், பணம் கட்டுதல், காசோலை, அரசு தொடர்பான பணிகள், மற்ற வங்கிகளுக்கு பணம் கொடுத்தல் பணிகள் மட்டுமே நடக்கும். நகைக்கடன் வழங்கப்படமாட்டாது. புதிய வீட்டு கடன் உள்ளிட்ட கடன் வழங்கும் பணிகளும் நடக்காது. இத்தகைய விதிமுறைகள் இன்று 23ம் தேதி முதல் உடனடியாக அமலுக்கு வருகிறது. சில வங்கிகள் இந்த நேரத்தை அமல்படுத்த ஒரு சில தினங்கள் எடுத்துக் கொள்ளவும் அனுமதியளிக்கப்பட்டுள்ளது.

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.