உத்தரபிரதேசம் மாநிலம் முசாபர் நகரில் உத்கர் விரைவு வண்டியின் 14 பெட்டிகள் தடம்புரண்டு விபத்துக்குள்ளானது. இதில் 20 பேர் பலியானார்கள். 97 பேர் காயமடைந்தனர். இந்நிலையில் இருப்புப் பாதை துறை புள்ளிவிவரப்படி, கடந்த ஐந்து ஆண்டுகளில்; 586 தொடர்வண்டி விபத்துகள் ஏற்பட்டுள்ளன. இவற்றில் 53 விழுக்காடு விபத்துகள் தடம்புரண்டதே காரணம். கடந்த 2014 முதல் தற்போது வரை 20 தொடர்வண்டி விபத்துகள் நடந்துள்ளன. இவற்றில் பெரும்பாலானவை சிறிய விபத்துகள் ஆகும். மோசமான தொடர்வண்டி விபத்தாக கடந்த 2016 நவம்பர் 20ல் இந்தூர் - பாட்னா விரைவு தொடர்வண்டி தடம்புரண்டதால் ஏற்பட்டது. உத்தரபிரதேசம் தலைநகர் கான்பூர் அருகே நடந்த இந்த விபத்தில் 150 பேர் பலியானார்கள். 150க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர். அதிகளவு கூட்ட நெரிசல், தண்டவாளத்தில் ஏற்பட்ட விரிசல் காரணமாக தொடர்வண்டி தடம்புரண்டது தெரியவந்தது. கடந்த 2015 செப்டம்பர் 12ல் மீட்டர்கேஜ் இருப்புப் பாதையில் சென்ற ஷிவாலிக் குயின் தொடர்வண்டி தடம்புரண்டது. இதில் பயணம் செய்த 36 சுற்றுலா பயணிகளில் 2 பேர் பலியானார்கள். ஒருவர் காயமடைந்தார். செப்டம்பர் 12ல், குர்நாடகாவின் குல்பர்கி நகரில் செகந்திரபாத் - மும்பை இடையிலான லோக்மான்ய திலக் துரந்தோ தொடர்வண்டியின் 9 பெட்டிகள் தடம்புரண்டதில் 2 பேர் பலியானார்கள். பலர் காயமடைந்தனர். ஆகஸ்ட் 4ல் இரண்டு தொடர்வண்டிகள் தடம்புரண்டன. வாரணாசி சென்ற கமயானி விரைவுவண்;டி காட்டாற்று வௌ;ளம் காரணமாக தடம்புரண்டது. பின்னர் ஜனதா விரைவுவண்;டி தடம்புரண்டது. இதில் 31 பேர் பலியானார்கள். 100 பேர் காயமடைந்தனர். மே 25ல் உத்தரபிரதேசத்தின்; கவுசாம்பி மாவட்டத்தில் ரூர்கேலா ஜம்மு தாவி தொடர்வண்டியின் 8 பெட்டிகள் தடம்புரண்டன 5 பேர் பலியானார்கள். 50 பேர் காயமடைந்தனர். அதேஆண்டு மார்ச் 20ல் டேராடூன் - வாரணாசி ஜனதா விரைவுவண்டி ரேபரேலியில் தடம்புரண்டதில் 58 பயணிகள் பலியானார்கள். 150 பேர் காயமடைந்தனர். பிப்ரவரி 13ல் பெங்களூரு - எர்ணாகுளம் இண்டர்சிட்டி விரைவு வண்டி, பெங்களூரு அருகே தடம்புரண்டதில் 10 பேர் பலியாக, 150 பேர் காயமடைந்தனர். ஆக தொடர்வண்டி விபத்து புள்ளி விவரங்களில், இருப்புப் பாதை பராமரிப்பு குறைபாடே தலையாய இடம் பெற்றிருப்பது தெரிகிறது. அதுவும் குறிப்பாக வடமாநிலத் தொழிலாளர்களின் பொறுப்பற்ற தன்மை வெளிப்படையாகத் தெரிகிறது. இந்தியத் தொடர்வண்டித்துறை கருத்தில் கொள்ளுமா?
மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.



