Show all

தப்பியோடிய கொரோனா நோயாளி! மங்களூரில் பரபரப்பு

காய்ச்சலோடு கொரோனா அறிகுறிகளுடன் ஞாயிற்றுக்கிழமை துபாயில் இருந்து இந்தியாவுக்கு வந்தவர் உடனடியாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில், இன்று காலையில் அவர் மருத்துவமனையில் இருந்து காணாமல் போய் மங்களூரில் பரபரப்பு கிளப்பியுள்ளார்.

26,மாசி,தமிழ்தொடர்ஆண்டு-5121: கொரோனா வைரஸ் தொற்று இருக்கக்கூடும் என்ற ஐயத்தில் கர்நாடக மாநிலம் மங்களூரில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட ஒருவர் தப்பித்ததையடுத்து, காவல்துறையினர் அவரை தேடி வருகின்றனர்.

காய்ச்சலோடு கொரோனா அறிகுறிகளுடன் ஞாயிற்றுக்கிழமை துபாயில் இருந்து இந்தியாவுக்கு வந்தவர் உடனடியாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இந்நிலையில், திங்கள்கிழமை காலையில் அவர் மருத்துவமனையில் இருந்து காணாமல் போயுள்ளார்.

கர்நாடக மாநில நலங்குத்துறை அதிகாரி, எங்கள் கண்காணிப்பு குழு அவரது வீட்டுக்கு காவல்துறையினருடன் சென்று மீண்டும் அவரை மருத்துவமனைக்கு அழைத்து வரும் பணியில் ஈடுபட்டுள்ளது என்று தெரிவித்தார்.

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.