குழந்தை அனாதையாக அழுது கொண்டிருக்க, வந்தனா கழுத்து அறுக்கப்பட்ட நிலையில் கொலை செய்யப்பட்டு சடலமாக கிடந்தார். வீட்டுக்கு பின்புறம், ஆகாசும், சன்னியும் கழுத்து அறுபட்டு அவர்களும் இரத்த வெள்ளத்ல் கிடந்தனர். இதை பார்த்து அலறிய பொதுமக்கள் உடனடியாக இரும்பாலை காவல்துறையினருக்குத் தகவல் தெரிவித்தனர். வடமாநிலக் கும்பல் அட்டூழியம் 27,மாசி,தமிழ்தொடர்ஆண்டு-5121: உத்தரபிரதேச மாநிலம் ஆக்ராவிலிருந்து கல்வித்தகுதியோ தொழில் தகுதியோ இல்லாமல் பிழைப்புக்காக வேலைதேடி சேலம் இரும்பாலை பகுதியில் குடியேறியிருப்பவர்கள் ஆகாஷ் அகவை 27, இவரது மனைவி வந்தனா அகவை 25, ஆறு மாத ஆண் குழந்தை மற்றும் ஆகாஷின் உறவுக்கார பையன் 16அகவை சிறுவன் சன்னி. இவர்கள் எல்லாரும் சேலம் மாவட்டம் இரும்பாலை அருகே பெருமாம்பட்டி கிலான் வட்டம் பகுதியில் ஒரு வீட்டை வாடகைக்கு எடுத்து வசித்து வந்தனர். அதே பகுதியில் ஒரு வெள்ளிப்பட்டறையில் ஆகாஷ், வந்தனா, சன்னி ஆகியோர் கூலித்தொழிலாளர்களாகவும் வேலை செய்து வந்தனர். இந்தநிலையில், ஞாயிற்றுக்கிழமை விடுமுறை என்பதால் ஆகாஷ், வந்தனா, சன்னி ஆகியோர் வீட்டில் இருந்தனர். பிறகு நடுஇரவில் குழந்தை நீண்ட நேரமாக அழும் ஓசை கேட்டு, அக்கம் பக்கம் வசித்தவர்கள் ஆகாஷ் வீட்டுக்கு சென்று பார்த்தனர். அங்கே குழந்தை அனாதையாக அழுது கொண்டிருக்க, வந்தனா கழுத்து அறுக்கப்பட்ட நிலையில் கொலை செய்யப்பட்டு சடலமாக கிடந்தார். வீட்டுக்கு பின்புறம், ஆகாசும், சன்னியும் கழுத்து அறுபட்டு அவர்களும் இரத்த வெள்ளத்ல் கிடந்தனர். இதை பார்த்து அலறிய பொதுமக்கள் உடனடியாக இரும்பாலை காவல்துறையினருக்குத் தகவல் தெரிவித்தனர். விரைந்து வந்த காவல்துறையினர் மூன்று பேரின் சடலங்களையும் கைப்பற்றி விசாரணை மேற்கொண்டனர். இந்த சமயத்தில் அதே பகுதியில் உத்தரபிரதேச மாநிலத்தை சேர்ந்த 4 இளைஞர்களும் தப்பியோடியது தெரியவந்தது. இதனால் காவல்துறையினரின் ஐயம் அவர்கள் மீது திரும்பியது. அந்த பகுதியில் உள்ள கண்காணிப்பு படக்கருவியை ஆய்வு செய்தபோது அந்த 4 இளைஞர்கள் தப்பி ஓடுவது தெரிந்தது. அவர்கள்தான் இந்த 3 கொலைகளையும் செய்திருக்கலாம் என்ற கோணத்தில் காவல்துறையினர் முடிவு செய்து அவர்களை தேடும் பணியில் ஈடுபட்டனர். அந்தக் கும்பல், 5 ஆண்டுகளுக்கு முன்பு இதே பகுதியில் தங்கி இருந்துள்ளனர். கொலை நடந்த 2 நாளைக்கு முன்புதான் ஆகாஷ் குடியிருக்கும் பகுதிக்கு வந்திருக்கிறார்கள்.. இவர்களுக்குள் முன்பே அறிமுகம் இருந்திருக்கிறது. கொலை செய்யப்பட்ட வந்தனாவின் கழுத்தில் நகக்கீறல்கள் இருந்தன.. அவரது சுடிதாரும் கிழிந்த நிலையில் கிடந்தது. அதனால் வந்தனா மீது பாலியல் வன்முறையில் அந்த அயோக்கியர்கள் ஈடுபட்டிருக்கக்கூடும் என்று காவல்துறை தரப்பில் யூகிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், அந்த வடமாநில இளைஞர்கள் தப்பிவிடாதபடி நடவடிக்கைகள் எடுக்கப்பட்டன. அவர்களது செல்போசி சைகைகளை வைத்து பார்த்ததில், கொலையாளிகள் பாலக்காடு தொடர்வண்டிப் பகுதியில் சுற்றி வருவது தெரிந்தது. இரவோடு இரவாக சேலம் காவல்துறையினர் அங்கு சென்று 3 பேர்களை சுற்றி வளைத்து கைது செய்தனர். ஒருவன் மட்டும் தப்பி உள்ளான். அவனையும் தேடி வருகிறார்கள். பிடிபட்ட 3 பேரும் காவல்துறை விசாரணையில் தெரிவித்ததாவது: ஞாயிற்றுக்கிழமை நாங்க 4 பேரும் தண்ணி அடித்தோம். ஆகாஷின் மனைவியை பலாத்காரம் செய்ய முடிவு செய்தோம். அவர் வீட்டிற்குள் நுழைந்தோம். ஆனால் அவர் அதற்கு மறுத்தார். அலறி கூச்சல் போட்டார். சத்தம் கேட்டு யாராவது வந்துவிடுவார்கள் என்று பயந்து போன நாங்கள் அவரது கழுத்தை அறுத்தோம். அப்போது வந்தனா அலறல் கேட்டு ஆகாசும், சன்னியும் ஓடிவந்தனர். அவர்களையும் கழுத்தில் அறுத்துவிட்டு தப்பி ஓடினோம் என்றனர். அவர்களிடம் தொடர் விசாரணை நடந்து வருகிறது. இப்படி வாழ்மானமும், ஒழுக்கமும் இல்லாமல் பிழைப்பு தேடி அலையும் மக்கள் ஒரு புறம். தமிழகத்தின் அனைத்து பெருங்கட்டுமான நிறுவனங்களில் கல்வித்தகுதியோ தொழில் தகுதியோ இல்லாத உடலுழைப்புக் கூலிகள் ஒருபுறம். குஜராத்தில் அவமானச் சுவர் எழுப்பும் அளவிற்கு வறுமையில் வாடும் அப்பாவி மக்களால் நிரம்பிய வட இந்தியா. ஆனால் வடஇந்தியாவின் அன்றைய காங்கிரஸ் தலைவர்களும் சரி இன்றைய பாஜக தலைவர்களோ சரி- தங்கள் மக்களின் கல்வி, தொழில், வாழ்மானம் குறித்து கவலைப்படாமல், தன்னூக்கமாக வளர்ந்து வரும் மற்ற மாநிலங்கள் மீது ஹிந்தி மொழியையும், ஹிந்துத்துவா புளுகு மூட்டைகளையும் திணிப்பதிலேயே தங்கள் அதிகாரத்தை வீணடித்து வருகின்றார்கள்.
மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.



