ரூபாய் தாள்கள் செல்லாது என்ற அறிவிப்பினைத் தொடர்ந்து நாடாளுமன்றத்தில் எதிர்க்கட்சிகள் நடுவண் அரசு எடுத்த இந்த நடவடிக்கை குறித்து நாடாளுமன்ற இரு அவைகளிலும் பிரதமர் நரேந்திர மோடி விளக்கம் அளிக்க வேண்டும் என்று வலியுறுத்தி வருகின்றன. இதனால் நாடாளுமன்ற குளிர்காலக் கூட்டத் தொடர் கூடியதில் இருந்து, இரு அவை நடவடிக்கைகளும் நடைபெறாமல் பல முறை அவை ஒத்திவைக்கப்பட்டு வருகிறது. இந்த நிலையில், முக்கிய அமைச்சர்களுடன் பிரதமர் நரேந்திர மோடி இன்று காலை 10.30 மணியளவில் அவசர ஆலோசனை நடத்தினார்.
மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.



