Show all

தேர்தல் ஆணையம் அனுப்பவுள்ளது மோடிக்கு கவனஅறிக்கை! தேர்தல் நடத்தை விதிமீறலுக்காக: சாதி குறித்து பேச்சு

ராகுல் காந்தி அமேதி தவிர கேரளாவின் வடக்கு பகுதியில் உள்ள வயநாடு தொகுதியிலும் போட்டியிடுகிறார். ராகுலின் இந்த முடிவு ஒருபக்கம் பாராட்டையும் மறுபக்கம் பலத்த விமர்சனத்தையும் ஏற்படுத்தி உள்ளது.
23,பங்குனி,தமிழ்தொடர்ஆண்டு-5120: ராகுல் காந்தி அமேதி தவிர கேரளாவின் வடக்கு பகுதியில் உள்ள வயநாடு தொகுதியிலும் போட்டியிடுவது குறித்து, மோடியும் வார்தாவில் நடந்த பொதுக்கூட்டத்தில் பேசும்போது குறிப்பிட்டார். அவர் கூறுகையில், 'வயநாடு தொகுதியில் சிறுபான்மை இன மக்கள் மிக, மிக அதிகமாக உள்ளனர். அவர்களது வாக்குகளை நம்பியே ராகுல் வயநாடு தொகுதிக்கு சென்றுள்ளார்' என்றார். 
மோடியின் இந்த கருத்து, தேர்தல் நடத்தை விதிகளை மீறிய பேச்சு என்ற குற்றச்சாட்டு எழுந்துள்ளது. சாதி, மதத்தை குறிப்பிட்டு யாரும் தேர்தல் கருத்துப்பரப்புதல் செய்யக் கூடாது என்பது முதன்மை விதிகளில் ஒன்றாகும். இந்த நடத்தை விதியை மோடி திட்டமிட்டு மீறி கருத்துப்பரப்புதல் செய்ததாக புகார்கள் எழுந்துள்ளன.
இது தொடர்பாக காங்கிரஸ் கட்சியும் புகார் அளித்துள்ளது. காங்கிரஸ் தலைவர் அபிஷேக் மனு சிங்வியும் உறுதிப்படுத்தினார். இதைத் தொடர்ந்து மோடியின் மதம் சார்ந்த தேர்தல் கருத்துப்பரப்புதலுக்கு விளக்கம் கேட்டு கவனஅறிக்கை அனுப்ப தலைமைத் தேர்தல் ஆணையம் முடிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது.
-தமிழர்க்குத் தொடர்ஆண்டு மட்டுமல்ல தொடர் நாள் கணக்கும் உண்டு. இன்று தமிழ்த் தொடர்நாள் எண்:18,70,114.

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.