Show all

நட்பே துணை படம் வசூலில் சாதனையாம்! எதிர்பாராத மகிழ்ச்சியில் ஹிப் ஹாப் ஆதி

நட்பே துணை படம் 2 நாட்கள் முடிவில் ரூ.6 கோடி வரை வசூலித்து உள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளது. வெளியான முதல் நாள் முடிவில் இந்த படம் ரூ.3 கோடிக்கும் அதிகமாக வசூலித்ததாக கூறப்படுகிறது. 

23,பங்குனி,தமிழ்தொடர்ஆண்டு-5120: இரண்டு நாட்களுக்கு முன்பு வெளியாகி வசூலில் கலக்கிக் கொண்டிருக்கும் படம் நட்பே துணை. ஹிப் ஹாப் ஆதியின் நடிப்பில் இந்த படம் ரசிகர்கள் மத்தில் நல்ல திறனாய்வுடன் வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கிறது. 

ஹிப் ஹாப் ஆதி, அனாகா, கரு.பழனியப்பன், ஹரீஸ் உத்தமன், ஆர்ஜே விக்னேஷ், சாரா, எரும சாணி, விஜய், பிஜிலி ரமேஷ் ஆகியோர் இந்த படத்தில் நடித்துள்ளனர். 

 நட்பே துணை படம் 2 நாட்கள் முடிவில் ரூ.6 கோடி வரை வசூலித்து உள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளது. வெளியான முதல் நாள் முடிவில் இந்த படம் ரூ.3 கோடிக்கும் அதிகமாக வசூலித்ததாக கூறப்படுகிறது. 

 அதாவது, கார்த்தியின் தேவ், சிம்புவின் வந்தா ராஜாவாதான் வருவேன் ஆகிய படங்களின் முதல் நாள் வசூலை விட அதிகமாம். அதே போல், முதல் நாள் திரையீட்டு கணக்கில் பேட்ட, விஸ்வாசம் படத்தை அடுத்து அதிக வசூல் இந்த படத்திற்குதான் கிடைத்துள்ளதாம்.

நட்பே துணை ஹிப்ஹாப் ஆதியின் இரண்டாவது படம். ஹாக்கி விளையட்டை மையப் படுத்தி எடுக்கப் பட்டுள்ளது.

 ஆதி பிரான்சில் குடியேறும் எண்ணத்துடன் சுற்றித்திரியும் சொகுசு இளைஞன். ஆனால் பெயர் என்னவோ பிரபாகரன்.

காதலிக்காக ஹாக்கி மட்டையைக் கையில் எடுக்கிறார் பிரபாகரன். இந்த நிலையில் ஹாக்கி விளையாட்டையும் திடலையும் தங்கள் உயிராக நினைத்து வாழ்ந்து கொண்டிருக்கின்றனர் காரைக்கால்அரங்கநாதன் திடல் பகுதி மக்கள்.

அந்தத்திடலில் ஆலை அமைக்க திட்டமிடுகிறது ஒரு கார்ப்பரேட் நிறுவனம். உள்ளூர் அமைச்சரும் கோடிக்கணக்கில் இலஞ்சம் பெற்றுக் கொண்டு அதற்கு ஒப்புதல் வழங்குகிறார்.

காதலிக்காக கையில் எடுத்த மட்டையால் மிரட்டலான வெற்றியைக் கொடுத்து திடலைக் காப்பாற்றுகிறார் ஆதி 

-தமிழர்க்குத் தொடர்ஆண்டு மட்டுமல்ல தொடர் நாள் கணக்கும் உண்டு. இன்று தமிழ்த் தொடர்நாள் எண்:18,70,114.

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.